மகாராஷ்டிராவில் தொடரும் கன மழை மற்றும் நிலச்சரிவுகள்!! 136 பேர் பலி!! சோகத்தில் மக்கள்!!
மகாராஷ்டிராவில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் பல நிலச்சரிவுகள் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவங்களில் இதுவரை 136 பேர் உயிரிழந்துள்ளனர்.அதே நேரத்தில் புனேவில் 84,452 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து பொழியும் கனமழை காரணமாக பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ராய்காட் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 38 பேர் உயிரிழந்ததாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 48 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 136 ஐ எட்டியுள்ளது. இதில் இறந்தவர்கள் பெரும்பாலானோர் ராய்காட் மற்றும் சதாரா மாவட்டங்ககளை சேர்ந்தவர்கள்” என்று அந்த அதிகாரி கூறினார். நிலச்சரிவுகள் தவிர, ஏராளமான மக்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டனர். சதாரா மாவட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு மாவட்டங்களான கோண்டியா மற்றும் சந்திரபூர் போன்றவற்றில் இருந்து மேலும் இறப்புகள் பதிவாகி உள்ளது என்று அவர் கூறினார்.
ராய்காட் மாவட்டத்தில் நிலச்சரிவு வியாழக்கிழமை மாலை மகாத் தெஹ்ஸில் உள்ள தலாய் கிராமம் அருகே நடந்தது. என்டிஆர்எஃப் குழுக்களும் உள்ளூர் அதிகாரிகளும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். வியாழக்கிழமை இரவு சதாராவின் படான் தெஹ்ஸில் உள்ள அம்பேகர் மற்றும் மிர்கான் கிராமங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. மொத்தம் எட்டு வீடுகளை புதைத்தது என்று சதாரா கிராமப்புற போலீஸ் அதிகாரி அஜய் குமார் பன்சால் தெரிவித்தார். ஆனால் இந்த இரண்டு சம்பவங்களில் இதுவரை எந்த இறப்புகளையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தப்படவில்லை.