இன்று வெளியாகிறது 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள்! தெரிந்துகொள்வது எப்படி?

0
77

தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நோய்த்தொற்றின் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டு காலமாக மூடப்பட்டிருந்தனர் அதன்பின்னர் நோய் தொற்று பரவலுக்கு ஏற்றவாறு ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, தற்போது பள்ளிகள் கல்லூரிகள் என்று அனைத்தும் மெல்ல, மெல்ல செயல்பட தொடங்கி வருகிறது.அந்த வேகத்தில் தற்சமயம் பள்ளிகள் செயற்படாவிட்டாலும் ஆசிரியப் பெருமக்கள் பள்ளிகளுக்குச் சென்று அங்கே இருக்கக் கூடிய வேலைகளை கவனிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதாவது எதிர்வரும் கல்வியாண்டிற்கான புத்தகங்கள் வழங்குவது, சீருடைகள் வழங்குவது என்று பல்வேறு பணிகள் தேக்கமடைந்திருக்கிறது.

அந்த வேளைகளை கவனிப்பதற்காக ஆசிரிய பெருமக்கள் அனைவரும் பள்ளிகளுக்கு சென்று அங்கே இருக்கக்கூடிய வேலைகளையும், கவனிக்க வேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.இந்த நிலையில், சென்ற சில தினங்களுக்கு முன்னர் சி பி எஸ் இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் விவரம் கடந்த 19ஆம் தேதி வெளியான விலையில் ஐசிஎஸ்இ ஐ எஸ் சி பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று மாலை 3 மணி அளவில் வெளியிடப்படுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

நோய்த்தொற்று பரவல் காரணமாக, சென்ற வருடம் சிபிஎஸ்இ 12 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதனை அடுத்து தொடர்ச்சியாக இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் ஐசிஎஸ் இஐஎஸ்சி 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளையும் ரத்து செய்தது.பொது தேர்வு முடிவை கணக்கிட்டு அதற்கான பணிகளை நிறைவு செய்து இருந்த சூழ்நிலையில், இன்று தேர்வு முடிவை வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இன்று மாலை 3 மணி அளவில் தேர்வு முடிவு வெளியாக இருக்கிறது. மாணவர்கள் www.cisce.org,www.resultscisce.org என்ற இணையதளங்களில் தங்களுடைய மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.