மக்களே உசார்! கிரீன் டீயை இப்படி குடிங்க! இல்லையெனில் பெரும் ஆபத்து!

0
359
#image_title

இன்றைய காலகட்டத்தில் காபி,டீ யை விட கிரீன் டீயை தான் அதிகளவு மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள். கிரீன் டீயை குடித்தால் உடல் எடை குறையும் என்று மக்கள் நம்புகிறார்கள். உடல் எடையை குறைக்க இதில் அதிக அளவு மருத்துவ குணம் உள்ளது என்று அனைவரும் கிரீன் டீயை குடிக்கும் பழக்கத்திற்கு மாறி வருகின்றனர்.
இதனால் டீ ,காபியை விட்டுவிட்டு கிரீன் டீயை அதிகமாக உபயோகிக்கின்றனர்.
புதிதாக நாம் ஒரு உணவை உட்கொள்ளும் போது அது நன்மையா? தீமையா? என்று நாம் ஆராய்ச்சி செய்வதில்லை. ஆனால் நாம் அப்படி செய்யாமல் அதில் என்னென்ன நன்மை உள்ளது, தீமை உள்ளது என்று ஆராய்ந்து செயல்முறை படுத்த வேண்டும்.

கிரீன் டீயை உபயோகிக்கும் முறை:

ஒரு நாளைக்கு கிரீன் டீ 1 அல்லது 2 கப்புகள் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அதைவிட அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
உடல் எடை வேகமாக குறையும் என்று கிரீன் டீயை சில பேர் அதிகமாக எடுத்துக் கொள்கின்றனர் .ஆனால் அவ்வாறு நாம் அதை எடுத்துக் கொள்ளக் கூடாது. இதனால் நம் உடலில் பக்க விளைவுகள் ஏற்படும்.

தீமைகள்:
வேண்டிய அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது நம் உடலில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இத்தகைய பிரச்சினைகள் வராமல் தடுக்க கிரீன் டீயுடன் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.
கஃபைன் அதிகமாக உள்ள கிரீன் டீயை குடிப்பதினால் உங்களுக்கு பதற்றம் ஏற்படலாம்.
கிரீன் டீ யை வெறும் வயிற்றில் குடிப்பதால் அதிக நன்மைகள் மற்றும் முழுதாக சத்துக்கள் கிடைக்கும் என்று அதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கின்றனர். ஆனால் அது தவறு.
வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால் கல்லீரல் சிறுநீரகம் போன்றவற்றில் பிரச்சனையை உண்டாக்கும்.
கிரீன் டீ அதிகமாக எடுத்துக் கொள்வதினால் நம் உடலில் உள்ள கால்சியம் சிறுநீர் மூலமாக வெளியேறிவிடும்.

கிரீன் டீ யை யாரெல்லாம் முக்கியமாக குடிக்க கூடாது:

1) கர்ப்பிணி பெண்கள்
2) பாலூட்டும் தாய்மார்கள்
3) மருந்து சாப்பிடுபவர்கள்

கர்ப்பிணி பெண்கள் கிரீன் டீயை குடிப்பதால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
பாலூட்டும் தாய்மார்கள் கிரீன் டீ குடிப்பதினால் அதில் உள்ள கேபைன் பாலில் கலந்து குழந்தையின் உடலில் சேர்ந்து விடும்.
மருந்து மாத்திரைகள் சாப்பிடுபவர்கள் கிரீன் டீ எடுத்துக் கொள்வதினால் அவர்கள் சாப்பிடும் மருந்துகளின் செயல்பாடுகள் செயலிழந்து விடும்.
இதனால் வயிற்றுப்போக்கு ரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்த தகவல்கள் உங்களுக்கு நல்ல பயனைத் தரும் என்று இங்கு பதிவு செய்கிறேன். புதிதாக ஒரு செயலை செய்யும் போது அதில் உள்ள நன்மை தீமை என்னவென்று ஆராய்ந்து செயல்படுங்கள்

Previous articleசேலம் மாநகராட்சி கூட்டத்தில் தனி கூட்டு குடிநீர் திட்டம் பற்றி அதிமுக திமுக காரசார விவாதம் !!
Next articleஒரு கப் கோதுமை இருக்கா! இதோ அரை மணி நேரத்தில் கோதுமை பாயசம் ரெடி!