மக்களே கவனம்.. நமது உடலில் புற்றுநோய் இருந்தால் முதலில் இந்த அறிகுறிகள் தான் இருக்குமாம்!!

Photo of author

By Divya

மக்களே கவனம்.. நமது உடலில் புற்றுநோய் இருந்தால் முதலில் இந்த அறிகுறிகள் தான் இருக்குமாம்!!

உயிருக்கு அச்சுறுத்துலை ஏற்படுத்தும் புற்றுநோய் ஆரம்ப காலகட்டத்தில் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் எளிதில் அதில் இருந்து மீண்டுவிடலாம்.உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகி மெல்ல மெல்ல மரணத்தின் வாயிலுக்கு அழைத்து செல்லுவதால் இந்நோய் பாதிப்பு மக்களை கடுமையாக அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள் மற்றும் அதை வராமல் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு அனைவரிடத்திலும் இருக்க வேண்டும்.உடலில் இருக்கின்ற உயிரணு செல்களை பாதிக்கும் நோயாக புற்றுநோய் உள்ளது.இதற்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் உடலில் இதர பாகங்களுக்கு புற்றுநோய் செல்கள் எளிதில் பரவி உறுப்புகளின் இயக்கத்தை நிறுத்திவிடும்.இது உயிருக்கு அபாயமாக மாறிவிடும்.கடந்த 2020 ஆம் ஆண்டில் மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய்,பெருங்குடல் புற்றுநோய் போன்றவற்றால் சுமார் 10 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கின்றது.

புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள்:

1)புகை பழக்கம்
2)மோசமான உணவுமுறை பழக்கம்
3)மாசடைந்த காற்று,நீர்
4)மரபணு மாற்றம்

புற்றுநோய்க்கான அறிகுறிகள்:

1)உடல் சோர்வு

புற்றுநோயின் பொதுவான அறிகுறியாக உடல் சோர்வு உள்ளது.புற்றுநோய் செல்கள் உடலின் ஆற்றலை உறுஞ்சி விடுவதால் உடலை வலுவிழக்க செய்து விடுகிறது.இதனால் அன்றாட வேலைகளை செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்படும்.இந்த உடல் சோர்வு உடல் வலி,குமட்டல்,மனச்சோர்வு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

2)எடை குறைவு

புற்றுநோய் பாதித்தவர்களுக்கு திடீரென்று உடல் எடை குறைந்துவிடும்.புற்றுநோய் செல்கள் உடலை உருக்கி விடுவதால் சிலருக்கு எலும்பின் மீது தோல் போர்த்தியது போன்று இருக்கும்.இவ்வாறு அதிகப்படியான உடல் எடை குறைந்தால் மருத்துவ பரிசோதனை செய்வது அவசியமாகும்.

3)அடிக்கடி தலைவலி

அடிக்கடி தலைவலி ஏற்படுதல்,அதிகப்படியான தலைவலி ஏற்படுதல் போன்றவை புற்றுநோய்க்கான அறிகுறிகளாகும்.எனவே அதிகப்படியான தலைவலி ஏற்பட்டால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

4)உடல் தடிப்பு

இரத்த புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சருமத்தில் பல பாதிப்புகள் ஏற்படும்.தோலில் சிவந்த தடிப்புகள் ஏராளமாக காணப்படும்.இதுபோன்ற தோல் தடிப்பு அதிகமாக காணப்பட்டால் அலட்சியம் கொள்ளாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் தீர்வு காண்பது நல்லது.

5)கண் வலி

இரு கண்களிலும் கடுமையான வலி இருந்தால் கண்களின் வழியாக புற்றுநோய் செல்கள் வளர்கிறது என்பதற்கான அறிகுறிகளாகும்.எனவே மேற்குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் கொள்ளாமல் உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் புற்றுநோய் பாதிப்பை தவிர்க்க முடியும்.