மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உடம்பில் இத்தனை பிரச்சனைகளா? அதிர்ச்சியளிக்கும் மருத்துவரின் வாக்குமூலம்!

0
345
Are the late Chief Minister Jayalalithaa having so many problems in her body? Shocking doctor's confession!
Are the late Chief Minister Jayalalithaa having so many problems in her body? Shocking doctor's confession!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உடம்பில் இத்தனை பிரச்சனைகளா? அதிர்ச்சியளிக்கும் மருத்துவரின் வாக்குமூலம்!

முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அம்மா அவர்கள் மறைவிற்கு பிறகு பல சர்ச்சைகள் எழுந்து வந்தது. அவர் இறந்ததிலிருந்து மக்கள் அனைவரும் கேட்கும் கேள்வி ஒன்றுதான். அவர் உடல்நிலை சரி இன்றி சிகிச்சை பெற்று வந்த சிசிடிவி வீடியோ ஏன் அகற்ற சொன்னீர்கள் என்பதுதான். அது சம்பந்தமாக விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையம் அமைப்பில் குழு ஒன்று அமைத்து செயல்பட்டு வருகிறது.சில மாதங்களுக்கு முன்பு அப்போலோ மருத்துவமனை நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்றத்தில் அப்போலோ கூறியது, ஆறுமுகசாமி ஆணையம் உண்மையை கண்டறியும் ஆணையமாக செயல்படவில்லை என்று கூறினர். மேலும் ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது என்றனர். பல்வேறு தலைவர்களை அழைத்து விசாரிக் வேண்டிய இடத்தில் மருத்துவர்களையே அழைத்து விசாரித்து வருகின்றனர் என்றெல்லாம் நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தனர்.

அதுமட்டுமின்றி ஆறுமுகசாமி ஆணையத்தில் நாங்கள் மருத்துவ ரீதியாக கூறுவதை கேட்கும் மருத்துவ வல்லுனர்கள் யாருமில்லை அப்படியிருக்கையில் நாங்கள் கூறும் விவரங்கள் அவர்களுக்கு எந்த விதத்தில் புரியும் என்பதையும் அவர் தரப்பு வாதத்தை முன்வைத்தனர்.அந்த வழக்கு மீண்டும் தொடர்ந்தது. அப்பொழுது தமிழக அரசு கூறியதாவது, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை விசாரிக்கும் ஆணையம் அல்ல என்று தனது முதல் வாதத்தை எடுத்து வைத்தனர். இது உண்மையை கண்டறியும் ஆணையம் என்று கூறினர். உண்மைகளை கண்டறிந்து வழங்குவதுதான் இந்த ஆணையத்தின் வேலை என்று தெரிவித்தனர். அதேபோல தற்பொழுது வரை 50 அப்போலோ மருத்துவர்களை விசாரித்து உள்ளதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியது. அதேபோல மருத்துவர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது என்ற கேள்வியை நீதிமன்றம் தமிழக அரசை நோக்கி வைத்தது.

அதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழக அரசு கூறியது, ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மருத்துவ ஆலோசனை தர நீதிமன்றம் விரும்பினால் அதை ஏற்க தயார். ஆனால் அந்த ஆலோசனை வழங்கும் மருத்துவர்களை நாங்களேதான் தேர்ந்தெடுப்போம் என்று தெரிவித்தனர். அவ்வாறு ஆலோசனை மருத்துவர்கள் தேர்ந்தெடுப்பதில் அப்போலோ எந்த தடையும் கூறக் கூடாது என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டது. அதன் பிறகு தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவ்வாறு இருக்கையில் ஆறுமுகசாமி ஆணையத்தில் தற்பொழுது அப்போது மருத்துவர் ஒருவர் வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ஜெயலலிதா அவர்கள் பதவி ஏற்பதற்கு முன்பே அவருக்கு உடலில் பல பிரச்சனைகள் இருந்து வந்தது. அவரால் பிறர் உதவி இல்லாமல் தனியாக நடக்க முடியாத சூழலில் இருந்தார்.

அதுமட்டுமின்றி தலைசுற்றல் மயக்கம் போன்றவையும் இருந்தது. இவ்வாறு இருந்த சூழலில் நான் ஜெயலலிதா அவர்கள் தங்கியிருந்த போயஸ் இல்லத்திற்கு சென்று அவரை சோதனை செய்தேன். பின்பு சில மருந்துகளை பரிந்துரைத்தேன். மேலும் உடற் பயிற்சிகளை மேற்கொள்ளும் வடையும் கூறினேன். அவரை முற்றிலும் நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என கூறினேன். ஆனால் அவரோ எனக்கு அதிக வேலை இருப்பதாக தெரிவித்தார். 16 மணி நேரமும் வேலை உள்ளதால் தன்னால் ஓய்வு எடுக்க முடியாது என்று கூறி மறுத்துவிட்டார். என இவ்வாறு அப்போலாம் மருத்துவர் பாபு மனோகர் தற்பொழுது வாக்குமூலம் அளித்துள்ளார். இவ்வாறு ஒரு பக்கம் இருக்கையில் தினகரன் அவர்கள் செய்தியாளர்களிடம் ஜெயலலிதா அவர்கள் உடல் நலக்குறைவால் மட்டுமே இறந்தார். அதை சிலர் அரசியலாக்க நினைக்கின்றனர் எனக் தற்பொழுது கூறியுள்ளார்.

Previous articleஇந்தியாவில் முடிவுக்கு வந்துள்ள கொரோனாவின் மூன்றாவது அலை!
Next articleஉக்ரைன் மருத்துவ மாணவர்கள் இனி இங்கேயே படிக்கலாமா? தமிழக அரசின் கோரிக்கைக்கு வழிவகுக்குமா மத்திய அரசு!