இந்தியாவில் முடிவுக்கு வந்துள்ள கொரோனாவின் மூன்றாவது அலை!

0
82

இந்தியாவில் முடிவுக்கு வந்துள்ள கொரோனாவின் மூன்றாவது அலை!

உலகின் பல்வேறு நாடுகளிலும் மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனாவின் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து கொண்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில்  கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த ஒமிக்ரான் வைரஸ் பரவல் குறுகிய காலத்திலேயே பெரும்பாலான நாடுகளில் வேகமாக பரவத் தொடங்கியது.

அதை தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந் தேதி இந்தியாவிலும் இந்த ஒமைக்ரானின் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பின், நாடு முழுவதும் இந்த தொற்றின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்தது. இதையடுத்து நாட்டில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்றும் அதிகரித்து வந்தது. இதன் காரணமாக, இந்தியாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனாவின் மூன்றாவது அலை தொடங்கியது.

இந்த நிலையில், தினசரி பாதிப்பு நேற்று முன்தினம் 5,476 ஆக இருந்த நிலையில் நேற்று 4,500க்கும் கீழ் குறைந்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,362 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக டிசம்பர் 20-ந் தேதி நிரலவரப்படி பாதிப்பு 5,326 ஆக இருந்தது. அதன்பிறகு, நாள்தோறும் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், சுமார் இரண்டரை மாதங்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 5 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 9,620 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுள்ளது. தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 54,118-ஆக குறைந்துள்ளதாகவும், இது நேற்று முன்தினத்தை விட 5,324 குறைவாகும் என தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K