மாப்பிளையை பற்றி கருத்து கூறிய பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப கதி! வெறி ஏறிய அண்ணன்!

0
69
What a pity for the woman who commented on the groom! Manic brother!
What a pity for the woman who commented on the groom! Manic brother!

மாப்பிளையை பற்றி கருத்து கூறிய பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப கதி! வெறி ஏறிய அண்ணன்!

இப்போதுள்ள காலத்தில் அனைவருக்கும் எல்லா சுதந்திரமும் உள்ளது. ஆனால் மாப்பிள்ளையைப் பற்றி கருத்துக் கூறிய பெண்ணை சொந்த அண்ணனே வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் ஒரு வீட்டில் அரங்கேறியுள்ளது. திருமணத்திற்கு மறுத்து வந்த தங்கையின் செயலினால் ஆத்திரம் மேலிட அண்ணன் இப்படி ஒரு செயலை செய்துள்ளார்.

ராய்ச்சூர் மாவட்டத்தில் தேவதுர்க்கா தாலுகாவில் கப்பூரை சேர்ந்தவர் சந்திரகலா என்ற பெண். 22 வயதான இவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளார்கள். இவரது அண்ணன் சியாம் சுந்தர். இவருக்கு வயது 28. சந்திரகலாவிற்கும் வீட்டில் பார்த்திருந்த மாப்பிள்ளைக்கும் 13-ஆம் தேதி அதாவது நாளை திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அந்தப் பெண்ணோ மாப்பிள்ளை கருப்பாக இருப்பதாக கூறி திருமணத்திற்கு மறுத்து வந்ததாக தெரிகிறது.

இருப்பினும் பெற்றோர் மற்றும் அவரது சகோதரர் சந்திரகலாவை சமாதனப்படுத்தி வந்தனர். அந்நிலையிலும், அவரது வீட்டில் பத்திரிக்கை அடித்து உறவினர்கள் நண்பர்களுக்கு எல்லாம்  கொடுத்து முடித்து, எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தனர். திருமணதிற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் மீண்டும் சந்திரகலா மாப்பிள்ளையைப் பற்றி கருத்துக் கூறியுள்ளார். மேலும் தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்றும் கூறியுள்ளார். இதனால் அவரது அண்ணன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதன் காரணமாக பார்த்த மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனால் அண்ணன் மற்றும் தங்கை இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஷியாம் சுந்தர் என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து அந்த பெண்ணை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சந்திரகலா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் திருமண வீடு சோகத்தில் மூழ்கியது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து கொலையான பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் தன்னை திருமணம் செய்ய இருந்த மாப்பிள்ளை கருப்பாக இருந்ததாக கூறி வந்ததால், திருமணம் செய்ய மறுத்ததும் பற்றி கூறினர். இதனால் ஆத்திரமடைந்த ஷியாம் சுந்தர் அவரை கோடாலியால் வெட்டி கொன்றதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது அண்ணனை கைது செய்தனர். மேலும் அவரைத் தொடர்ந்து விசாரித்தும் வருகின்றனர். திருமணத்திற்கு மறுத்ததால் தங்கையை அண்ணனே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.