தமிழகத்தில் இன்று முதல் புதிய ஊரடங்கு!! அமலுக்கு வந்த புதிய தளர்வுகள்!!

0
79

நாடு முழுவதும் கொரோனா தொற்றானது குறைந்து கொண்டே வருகிறது. மேலும், தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாமல், சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணி முதல் தொடங்கப்பட்ட ஊரடங்கு வரும் 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 சதவீதம் நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் . மேலும், இறுதி சடங்குகளில் 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும், புதுச்சேரிக்கு பேருந்து இயக்கப்பட்டு உள்ளது.

முன்பே, இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் , இனிப்பு கார வகைகள் நடைபாதைக் கடைகள், விற்பனை கடைகள் உள்ளிட்டவை வழக்கமான 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

மாநில மற்றும் ஒன்றிய அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வு, அரசு குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைமுறைகளுடன் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதனை பற்றிய விவரங்களை தேர்வு நடத்தும் அமைப்புகள் முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் அறிவிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்து உள்ளார்.

author avatar
Jayachithra