மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை.. உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!
விவசாயிகள் மற்றும் வீடுகள் தோறும் தமிழக அரசு மானிய மின்சாரம் வழங்கி வரும் நிலையில் இது குறித்த நபருக்கு முறையாக கிடைக்கின்றதா என்பதை உறுதி செய்து கொள்ள மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற புதிய உத்தரவை அமல்படுத்தியது.
மேலும் மானியம் மின்சாரம் பெறுவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதால் அதனை ஒழுங்குமுறைப்படுத்தவும் இதனை அமல்படுத்தியுள்ளதாகவும் மின்சாரத்துறை தெரிவித்திருந்த நிலையில் மக்கள் அனைவரும் மின் இணைப்புடன் ஆதார் இணைப்பை இணைக்க தொடங்கினர்.
இவ்வாறு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு இணைத்தால் மானிய மின்சாரம் கிடைக்காது என்று ஒரு பக்கம் வதந்திகள் கிளம்பிய நிலையில் இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று மனுதாரர் கூறி இருந்த நிலையில் இந்த வழக்கானது இன்று அமர்வுக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த புதிய விதிமுறை ஆனது மக்கள் பயன் பெரும் வகையில் அமைவதால் இதனை தடை செய்ய தேவையில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.அரசு வழங்கும் நலத்திட்ட உதவி ஆனது மக்களுக்கு சரியாக சென்றடைகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் இது உள்ளதால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க தடை இல்லை என தெரிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.