முகமது ஷமி க்கு ஸ்கெட்ச் போட்ட CSK அணி!! கோடிகளை கொட்ட தயாராக உள்ள மூன்று அணிகள்!!

Photo of author

By Vijay

cricket: ரஞ்சி கோப்பை தொடரின் கம்பேக் பின் ஷமியை csk அணி வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர வீரரான முகமது ஷமி யை மூன்று அணிகள் வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. குஜராத் அணி நிர்வாகம் அவரை தக்க வைக்கவில்லை. இத முறை ஏலத்தில் பங்கேற்க உள்ளார்.

இந்திய அணியின் மிக முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி இவர் கடைசியாக ஒரு நாள் உலக கோப்பை தொடரில் பங்கேற்றார்.  அதன் பின் அவர் காயம் காரணமாக எந்த போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை. 365 நாட்கள் அவர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

தற்போது ஓராண்டுக்கு பிறகு  மத்திய பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடினார். விளையாடிய முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெறித்தனமான கம்பேக் கொடுத்தார். இந்நிலையில் இன்னும் 10 நாட்களில் ஐ பி எல் மெகா ஏலம் நடைபெறவுள்ளது.

ஐ பி எல் போட்டியில் குஜராத் அணியில் விளையாடி கொண்டிருந்தார். ஆனால் இந்த முறை அந்த அணி அவரை தக்கவைக்காமல் வெளியிட்டது.  அதனால் இந்த முறை அவர் ஏலத்தில் பெரிய தொகைக்கு வாங்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் CSK அணி வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே குஜராத் இடம் அவரை வாங்க கேட்டது ஆனால் குஜராத் மறுத்துவிட்டது.

அதனால் இந்த முறை CSK அணி ஷமி வாங்க திட்டமிட்டு வருகிறது. மேலும் டெல்லி அணி மற்றும் கே கே ஆர் அணியும் வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஏலத்தில் இவர் ரூ. 14 கோடி வரை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.