பெண்களை அதிகம் பாதிக்கச் செய்யும் புற்றுநோய்களில் யோனி புற்றுநோயும் ஒன்று.மார்பு புற்றுநோய்,கருப்பை புற்றுநோய்க்கு அடுத்து பெண்கள் யோனி புற்றுநோய் பாதிப்பால் அவதியடைந்து வருவது அதிகரித்து வருகிறது.
பெண்களின் பிறப்புறுப்பு பகுதியில் கேன்சர் கட்டிகள் உருவாகி கடுமையான பாதிப்புகளை உண்டாக்கிவிடும்.இது உயிருக்கு ஆபத்தான பாதிப்பாக பார்க்கப்படுகிறது.இந்த புற்றுநோய் அரிதான ஒன்றாகும்.
இந்த யோனி புற்றுநோய் வெஜினா என்ற பகுதியில் வெளிப்புறத்தில் பரவும் தன்மை கொண்டது.இது உடலில் மற்ற இடங்களுக்கு பரவக் கூடிய ஒரு புற்றுநோய் வகையாகும்.இந்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால் யோனி பகுதியில் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
யோனி புற்றுநோய் அறிகுறிகள்:
1)பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு
2)பிறப்புறுப்பு கட்டி
3)பிறப்புறுப்பில் இரத்தப் போக்கு
4)அதிக வலி உணர்வு
5)சிறுநீர் வெளியேற்றும் பொழுது எரிச்சல் உணர்வு
6)உடலுறவில் சிரமம்
7)பிறப்புறுப்பு சருமம் தடித்து காணப்படுதல்
8)வுல்வர் பகுதியில் அரிப்பு
9)பிறப்புறுப்பு பகுதியில் மருக்கள்
யோனி புற்றுநோய்க்கான காரணங்கள்:
1)வயது முதுமை
2)புகைப்பழக்கம்
3)சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனை
4)நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு
யோனி புற்றுநோய் பாதிப்பு வராமல் இருக்க வழிகள்:
பாதுகாப்பான உடலுறவில் ஈடுபட வேண்டும்.பிறப்புறுப்பு பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை மற்றும் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.
சிஸ்டோஸ்கோபி என்ற சிகிச்சை மூலம் இந்த புற்றுநோய் எந்த அளவிற்கு பரவி இருக்கிறது என்பதை கண்டறிந்துவிட முடியும்.கோல்போஸ்கோபி என்ற பரிசோதனை மூலம் வுல்வா புற்றுநோய் கட்டிகள் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை எளிதில் கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்க முடியும்.நம் உணவுப் பழக்க வழக்கங்கள்,வாழ்க்கைமுறை ஆகியவற்றின் மீது அக்கறை செலுத்த வேண்டும்.