ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த பிசிசிஐ… அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் கிடையாதா!!

0
224

 

ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த பிசிசிஐ… அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் கிடையாதா…

 

அடுத்த ஆண்டு அதாவது 2024ம் ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடர் வெளிநாட்டில் நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

 

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் ஐபிஎல் தொடர் உலக அளவில் பிரபலம் அடைந்த தொடராகும். ஐபிஎல் தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்திய கிரிக்கெட் கவுன்சில் என்று அழைக்கப்படும் பிசிசிஐ ஐபிஎல் தொடங்கும் முன்பு வரை சாதாரணமான அமைப்பாக இருந்தது. ஐபிஎல் தொடர் கொண்டுவந்த பிறகு பிசிசிஐ உலகில் உள்ள கிரிக்கெட் வாரியங்களில் முக்கியமான அமைப்பாகவும் பணக்கார அமைப்பாகவும் மாறியது.

 

ஐபிஎல் தொடக்கத்தில் இதில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா என்ன தயக்கத்தில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் தற்பொழுது முதலீடு செய்ததை விட அதிக இலாபம் ஈட்டுகிறார்கள். அணியின் உரிமையாளர்கள் மட்டும் இல்லாமல் முதலீடு செய்த ஸ்பான்சர் நிறுவனங்களும் அதிக லாபம் அடைந்து வருகின்றனர்.

 

இந்தியாவில் ஐபிஎல் தொடர் எற்றி பெற்றதை அடுத்து ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மேற்க்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் போன்று பல நாடுகளில் லீக் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டது. அந்தந்த நாடுகளில் தொடங்கப்பட்ட கிரிக்கெட் தொடர்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்று வருககறது. மேலும் ஐபிஎல் போலவே தமிழகத்திலும் டி.என்.பி.எல் என்ற கிரிக்கெட் லீக் தொடர் தொடங்கப்பட்டு நடந்து வருகின்றது.

 

கடைசியாக நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அதாவது 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றது. இதையடுத்து அடுத்த வருடம் அதாவது 2024ம் ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரை வெளிநாட்டுக்கு பிசிசிஐ மாற்ற இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

 

அடுத்த ஆண்டு அதாவது 2024ம் ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகளுக்கு போதுமான அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனால் ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு நாடுகளில் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

அதே சமயம் அடுத்த ஆண்டு(2024) ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் வீரர்களுக்கு இரண்டு வாரங்கள் ஓய்வு தர வேண்டும். அதனால் மே மாதத்தின் பாதியிலேயே ஐபிஎல் தொடர் முடிக்க வாய்ப்புள்ளது. இருந்தும் இது குறித்து பிசிசிஐ உயர்மட்ட கூட்டத்தில்தான் முடிவு எடுக்கப்படும்.

 

இதற்கு முன்னர் தேர்தல் காரணமாக 2009ம் ஆண்டு ஐபிஎல் தொடரானது தென்னாப்பிரிக்கா நாட்டில் நடத்தப்பட்டது. மேலும் கொரோனா காரணமாக கடந்த 2020ம் ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதும் ஐக்கிய அரபு நாடுகளில் நடத்தப்பட்டது. 2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டு சில மாதங்கள் கழிந்து மீண்டும் ஐக்கிய அரபு நாடுகளில் நடத்தப்பட்டது குறிப்படத்தக்கது.

 

Previous articleபுதிய நிறத்தில் வெளியாகியுள்ள பைக்… BMW நிறுவனத்தின் புதிய பைக் இந்தியாவில் அறிமுகம்!!
Next article108 மெகா பிக்சல் கொண்ட புதிய ரியல் மி மொபைல்… இதன் விலை இவ்வளவு தானா!!