வாக்களிக்க அடையாள அட்டை இல்லையா..? கவலை வேண்டாம் – தீர்வு இதோ

0
238

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி தேர்தல் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது, வாக்களர்கள் வாக்களிக்க ஏதுவாக அறிவுரை வழங்குவது, வாக்காளர்களுக்கு சந்தேகம் ஏற்படி ஹெல்ப்லைன் செயலியை உபயோகபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.

வாக்காளர்களின் சந்தேங்கங்களை தீர்க்கும் வாக்காளர் ஹெல்ப் லைன் செயலி குறித்து பார்க்கலாம். இந்த வாக்காளர் ஹெல்ப்லைன் செயலி வாக்காளர்கள் தங்களது வாக்காளர் எண், வாக்காளர் பதிவேற்றம், வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றங்கள் செய்து கொள்ள, வாக்காளர் ரசீதை பதிவிறக்கம் செய்ய, புகார்களை பதிவு செய்ய, தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களை அறிந்து கொள்ள, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பொழுது உண்மையான முடிவுகளை தெரிந்து கொள்ள வழிவகை செய்துள்ளது.

இதுவரை 1.9 கோடி பேர் தங்களது செல்லிடப்பேசியில் இந்த வாக்காளர் ஹெல்ப்லைன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

1. வாக்காளர் ஹெல்ப்லைன் செயலியைப் பயன்படுத்தி ஒருவர் தனது வாக்காளர் அடையாள ரசீதை பதவிறக்கம் செய்துகொள்ளலாம்.

2. தனது தொலைப்பேசியில் உள்ள மற்ற எண்களுக்கு, தனது வாக்காளர் அடையாள ரசீதை பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

3. புதிய வாக்காளர்கள் தனது பெயரை சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

4. வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.

5. வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கும் சேவையை பெறலாம்.

6. வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றங்கள் செய்த பிறகு, புதிய வாக்காளர் அட்டைக் கோரி விண்ணப்பிக்கலாம்.

7. தங்களது விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை உடனுக்குடன் அறிந்தகொள்ளலாம்.

8. வாக்காளர்கள் தங்களது புகார்களைப் பதிவு செய்து கொள்ளவும் முடியும்.

9. இந்த செயலி மூலம் ஒரு வாக்காளர் தேர்தல் தொடர்பான எந்த விதமான புகார்களையும் எளிதாகப் பதிவு செய்யலாம். அந்த புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.

10. தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் தகவல்கள், பிரமாணப் பத்திரம் உள்ளிட்ட விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.

Previous articleவிரைவில் சசிகலாவை நோக்கி அதிமுக வரும்! அமமுகவின் முக்கிய நிர்வாகி!
Next articleதமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு? பகீர் கிளப்பும் எச்சரிக்கை ரிப்போர்ட்!