விருச்சிகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்!!

0
280
#image_title

விருச்சிகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்!!

விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்.அயன சயன ஸ்தானமாகிய விரைய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் கண்டிப்பாக ஒரு சந்தோஷமான சூழ்நிலை வந்து சேரும்.

வருமானம் வந்து செய்தாலும் செலவுகளும் கூடவே வந்து சேரும். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிப்பதால் சந்தோஷமாக காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் சில நேரங்களில் சில எரிச்சல் தரும் சம்பவம் நடைபெறலாம். தொழில் மற்றும் வியாபாரம் நிமித்தமாக பயணம் வாய்ப்புகள் மேம்படும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் முக்கிய பிரபலங்களாக பேசப்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடிப்பார்கள். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வீர்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் சில முன்னேற்றமான சூழ்நிலைகளை காண்பார்கள். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் சந்தோஷமான விசேஷங்களில் கலந்து கொண்டு மகிழ்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எந்த ஒரு வேலையும் கால தாமதம் ஆகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள்!!
Next articleதனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலத்திற்கு குறைவில்லாத நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here