தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும் நாள்!!

தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பிரார்த்தனைகள் மூலம் நினைத்தது நிறைவேறும்‌ நாள். நிதி அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பீர்கள்.

உபயோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் ஆச்சரியப்படும் விதத்தில் நன்மைகள் வந்து சேரும். கொடுக்கல் வாங்கல் சிறப்பான பாதையில் செல்லும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் சில நன்மைகளை கிடைக்க பெறுவார்கள்.

நண்பர்கள் உறவினர்களுடன் பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக செயல்படுவது உங்கள் மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும். அரசியல்வாதிகள் முக்கிய பிரபலங்களாக மாறுவார்கள். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். மூத்த வயதை சேர்ந்தவர்கள் ஆன்மீக விஷயங்களில் நாட்டம் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.