வேண்டாம் போதை! டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் விழிப்புணர்வு பேரணி! 

Photo of author

By Rupa

வேண்டாம் போதை! டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் விழிப்புணர்வு பேரணி! 

Rupa

Anti-drug awareness rally led by DSP Muthukumar!
வேண்டாம் போதை! டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் விழிப்புணர்வு பேரணி!

தேனி மாவட்டம் பெரியகுளம் உட்கோட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் பெரியகுளம் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் மற்றும் தேவதானப்பட்டி  காவல் ஆய்வாளர் சங்கர் முன்னிலையில் சார்பு ஆய்வாளர்கள் வேல் மணிகண்டன் மகேஸ்வரி அவர்கள் வழி நடத்திட தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் இணைந்து போதைப் பொருள் விழிப்புணர்வு கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

பின்பு பெரியகுளம் உட்கோட்ட  காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் போதை பொருள் விழிப்புணர்வு மாணவர்களுடன்  இணைந்து பேரணி நடைபெற்றது. இதில் மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தினால் என்ன தீங்கு விளைவிக்கும் என பொதுமக்களுக்கு எடுத்துரைத்து கோஷங்கள் எழுப்பி தேவதானப்பட்டி பகுதிகளில் பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.