சான்றிதழ் வழங்க 1.5 லட்சம் லஞ்சம்!! சிபிஐ டிடம் சிக்கிய மத்திய சுகாதாரம் குடும்ப நலத்துறை உதவி செயலாளர்!!

Photo of author

By Savitha

சான்றிதழ் வழங்க 1.5 லட்சம் லஞ்சம்!! சிபிஐ டிடம் சிக்கிய மத்திய சுகாதாரம் குடும்ப நலத்துறை உதவி செயலாளர்!!

அமெரிக்காவில் நண்பரின் மகன் மருத்துவ உயர் படிப்பு பயல்வதற்கான மத்திய சுகாதார அமைச்சகத்தின் சான்றிதழை பெற விண்ணப்பித்த நபரிடம், அமைச்சகத்தின் உதவிச் செயலாளர் சோனு குமார் ₹ 1.5 லஞ்சம் கேட்டதாக சிபிஐக்கு புகார் வந்தது.

இதைத் தொடர்ந்து, சிபிஐ விரித்த வலையில், லஞ்சம் கேட்ட அதிகாரி கையும் களவுமாக பிடிபட்டார். கைது செய்த பின் அவர் தங்கி இருந்த இடத்தில் சிபிஐ சோதனையிட்டது.

இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.