Health Tips

கோடை சரும கொப்பளத்தை போக்க உதவும் 04 குறிப்புகள்!! ட்ரை பண்ணி பாருங்க!!

உடலில் காணப்படும் சூட்டு கொப்பளங்கள் சில தினங்களில் மறைய நீங்கள் பின்பற்ற வேண்டிய வீட்டு வைத்தியக் குறிப்புகள் இதோ.

தீர்வு 01:

மஞ்சள் தூள்
தேங்காய் எண்ணெய்

கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் கொட்டி நன்கு கலக்குங்கள்.இதை சரும கொப்பளங்கள் மீது தடவினால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.

தீர்வு 02:

கற்றாழை ஜெல்
மஞ்சள் தூள்

ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கிவிட்டு ஜெல்லை பிரித்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதை தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அதில் சிறிதளவு மஞ்சள் தூள் போட்டு மிக்ஸ் செய்யுங்கள்.பிறகு இதை சூட்டு கொப்பளங்கள் மீது தடவுங்கள்.இப்படி செய்தால் அவை சீக்கிரம் குணமாகும்.

தீர்வு 03:

சந்தனப் பொடி
பன்னீர்

கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி சந்தனப் பொடி சேர்த்துக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் சிறிதளவு பன்னீர் ஊற்றி கலக்குங்கள்.இதை சூட்டு கொப்பளம் மீது தடவி நன்றாக காயவிடுங்கள்.இதுபோன்று செய்து வந்தால் கொப்பளங்கள் தானாக குணமாகிவிடும்.

தீர்வு 04:

விளக்கெண்ணெய்
மஞ்சள் தூள்

ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை ஒன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.இதை உடலில் காணப்படும் சீழ் கொப்பளங்கள் மீது தடவி நன்கு காயவிடுங்கள்.இப்படி தினமும் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் கொப்பளங்கள் அப்படியே பொடிந்துவிடும்.