நம் அன்றாட சமையலில் குக்கர் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாக உள்ளது.குக்கர் இருந்தால் நிமிடத்தில் வித விதமான சமையல் செய்துவிடலாம்.இன்றைய இயந்திர வாழ்க்கையில் இதுபோன்ற சமையல் பாத்திரங்களில் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.
இப்படி தினசரி பயன்படுத்தி வரும் குக்கரில் சில வகை உணவுகளை சமைத்து சாப்பிட்டால் அவை உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அந்தவகையில் குக்கரில் எந்தெந்த உணவுகளை சமைத்து சாப்பிடக் கூடாது என்பது குறித்து இங்கு விளக்கப்பட்டுளள்து.
1)கீரை
2)மீன் உணவுகள்
3)உருளைக்கிழங்கு
4)பாஸ்தா
5)அரசி
உங்களில் பலர் அரிசிசாதத்தை குக்கரில் தான் சமைப்பீர்கள்.அவசர காலத்தில் குக்கரில் சாதம் செய்து சாப்பிடுவதில் பிரச்சனை இல்லை.ஆனால் எப்பொழுதும் குக்கர் சாதம் சாப்பிட்டால் அவை உடல் ஆரோக்கியத்திற்கு தீங்காக மாறிவிடும்.
குக்கரில் அரிசி சாதம் செய்தால் அதில் ஸ்டார்ச் அக்ரிலாமைடு என்ற வேதிப்பொருள் வெளிப்படும்.இவை நமது உடல் ஆரோக்கியத்தை முழுமையாக பாதிக்கச் செய்துவிடும்.
அதேபோல் குக்கரில் காய்கறி உணவுகளை செய்து சாப்பிட்டால் அவற்றின் சத்து முழுமையாக குறைந்து ஆரோக்கியம் இல்லாதவையாக மாறிவிடும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பாஸ்தாவை குக்கரில் சமைத்தால் அவை உடல் ஆரோக்கியத்திற்கு தீங்காக மாறிவிடும்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,புரதம் போன்றவை அதிகம் நிறைந்த மீன் உணவுகளை குக்கரில் சமைத்தால் அவற்றின் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.அதிக சுவை நிறைந்த உருளைக்கிழங்கை குக்கரில் சமைப்பது ஆரோக்கியமானது அல்ல என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.