இரத்த சர்க்கரை அளவை எப்பொழுதும் கட்டுப்பாட்டில் வைக்கும் 05 பழக்கங்கள்!!

Photo of author

By Divya

இரத்த சர்க்கரை அளவை எப்பொழுதும் கட்டுப்பாட்டில் வைக்கும் 05 பழக்கங்கள்!!

Divya

உங்கள் இரத்த சர்க்கரை அளவு எப்பொழுதும் கட்டுப்பாட்டில் இருக்க நீங்கள் நிச்சயம் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஐந்து பழக்கங்களை பின்பற்ற வேண்டும்.

1)நாவல் பழம்

**அடிக்கடி நாவல் பழம் மற்றும் நாவல் விதை பொடி சாப்பிட்டு வந்தால் எப்பேர்ப்பட்ட சர்க்கரை நோயும் கட்டுப்பாட்டிற்கு வரும்.

**நாவல் விதையை நன்றாக காயவைத்து பொடித்து தேநீர் செய்து குடித்து வந்தால் இரத்த சர்க்கரை கட்டுப்படும்.

2)நித்தியகல்யாணி

முதலில் சிறிதளவு நித்தியகல்யாணி பூக்களை பறித்து நிழல் பாங்கான இடத்தில் பரப்பி காய வைக்க வேண்டும்.

அதன் பிறகு நித்தியகல்யாணி பூக்களை ஈரம் இல்லாத ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.

அதன் பிறகு நித்தியகல்யாணி இதழ்கள் சிறிதளவு போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.அடுத்து இந்த நித்திய கல்யாணி பானத்தை வடித்து பருக வேண்டும்.காலை மற்றும் மாலை என இரு நேரமும் பருகி வந்தால் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு வரும்.

3)பாகற்காய்

பாகற்காய் மற்றும் பாகல் இலையை சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.பாகல் இலையை அரைத்து சாறு எடுத்து பருகினால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

தினமும் ஒரு பாகற்காயில் ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

4)கொய்யா இலை

முதலில் இரண்டு கொய்யா இலையை நறுக்கி பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த கொய்யா இலை பானத்தை வடித்து பருகினால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்கு வரும்.

5)வெந்தயம்

பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி இரண்டு தேக்கரண்டி வெந்தயம் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.பின்னர் இந்த வெந்தய பானத்தை வடித்து பருகினால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.