பாலுக்கு நிகரான கால்சியம் சத்து கொண்டுள்ள 06 உணவுகள்!! குழந்தைகள் கட்டாயம் சாப்பிட வேண்டும்!!

Photo of author

By Divya

பாலுக்கு நிகரான கால்சியம் சத்து கொண்டுள்ள 06 உணவுகள்!! குழந்தைகள் கட்டாயம் சாப்பிட வேண்டும்!!

Divya

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கால்சியம் சத்து அவசியமான ஒன்றாக இருக்கின்றது.எலும்புகளின் வலிமை அதிகரிக்க,வயதான காலத்தில் மூட்டு வலி,கை கால் வலி வராமல் இருக்க கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

சிலர் பாலில் தான் கால்சியம் சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் நாம் அன்றாடம் சாப்பிட்டு கொண்டிருக்கும் பல வகை உணவுகள் கால்சியம் சத்து கொண்டவையாக இருக்கிறது.

அந்தவகையில் பாலுக்கு இணையான கால்சியம் சத்து நிறைந்த சில வகை உணவுகள் என்னென்ன என்பது தெரிந்து கொள்வோம்.

1)கீரைகள்

நாம் அடிக்கடி செய்து சாப்பிட வேண்டிய முக்கிய உணவு கீரைகள்.இதில் போலிக் ஆசிட் அதிகமாக நிறைந்திருக்கிறது.இது தவிர இரும்பு,கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.

2)தயிர்

பாலில் இருந்து கிடைக்கும் ஒரு பொருள் தயிர்.இதில் கால்சியம் சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.பாலில் இருந்து தயாரிக்கப்படும் பாலாடைக்கட்டியிலும் கால்சியம் சத்து நிறைந்து காணப்படுகிறது.

3)சோயா

பாலுக்கு நிகரான சத்துக்களை கொண்ட சோயாவில் சீஸ்,பன்னீர்,பால் போன்ற உணவுகள் தயாரிக்கப்படுகிறது.இந்த சோயா உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடலில் கால்சியம் சத்து அதிகமாகும்.

4)பீன்ஸ்

இதில் கால்சியம் சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.தினமும் பீன்ஸ் விதைகளை வேகவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எலும்புகள் வலிமை பெறும்.

5)பாதாம்

புரதம்,கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் பாதாம் பருப்பில் நிறைந்து காணப்படுகிறது.தினமும் பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.

6)கறிவேப்பிலை

இதில் கால்சியம் சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமை அதிகரிக்கும்.அதேபோல் பழங்கள்,தானியங்கள் சாப்பிட்டு வந்தால் கால்சியம் சத்து கிடைக்கும்.

கடல் மீன் உணவுகளை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,கால்சியம் போன்ற சத்துக்கள் கிடைக்கும்.