சாதாரண சளி,இருமல் பாதிப்பு ஓரிரு வாரத்தில் குணமாகிவிடும்.ஆனால் மாதங்கள் ஆகியும் சளி,இருமல் குணமாகவில்லை என்றால் நீங்கள் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும்.இன்றைய காலத்தில் பருவநிலை மாற்றம்,காற்று மாசுபட்டால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது.
ஆனால் ஒருவருக்கு தொடர்ச்சியாக சளி,இருமல் இருந்தால் அது வாக்கிங் நிமோனியாவிற்கான அறிகுறிகளாக இருக்கக் கூடும்.இந்த நிமோனியா,பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் ஏற்படுகிறது.நிமோனியா என்பது ஒரு நுரையீரலில் உண்டாகும் ஒரு நோய் தொற்றாகும்.பூஞ்சைகளாலும் நிமோனியா பாதிப்பு உண்டாகிறது.
வாக்கிங் நிமோனியா அறிகுறிகள்:
1)சுவாசப் பிரச்சனை
2)வாரங்கள் கடந்து நீட்டிக்கும் சளி மற்றும் இருமல்
3)மார்பு பகுதியில் வலி
4)குளிர்ச்சியான உணர்வு
5)லேசான காய்ச்சல்
6)பசியின்மை
நிமோனியா வகைகள்:
1)லோபார் நிமோனியா
2)மூச்சுக்குழாய் நிமோனியா
3)வாக்கிங் நிமோனியா
4)மைக்கோபிளாஸ்மா நிமோனியா
நிமோனியா பாதிப்பை உண்டாக்கும் பூஞ்சைகள்:
*கிரிப்டோகாக்கஸ்
*ஹிஸ்டோபிளாஸ்மாமோசிஸ்
*நிமோசைஸ்டிஸ்
மன அழுத்தம் ஏற்படுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.மன அழுத்தத்தை சரி செய்ய யோகா,தியானம்,எளிய உடற்பயிற்சி போன்றவற்றை செய்யலாம்.வெளியில் சென்று விட்டு வீடு திரும்பினால் கை மற்றும் கால்களை சோப் பயன்படுத்தி கழுவ வேண்டும்.
குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரவு யாருக்கு வேண்டுமானலும் இந்த வாக்கிங் நிமோனியா பாதிப்பு உண்டாகும்.நடைபயிற்சி,சுகாதாரம் பேணுதல்,மது மற்றும் புகைப்பழக்கத்தை தவிர்த்தல் போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் நிமோனியா பாதிப்பில் இருந்து மீள முடியும்.