கொரோனா களபணியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி! அரசு வெளியிட்ட உத்தரவு!
கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று என்பது அனைத்து நாடுகளிலும் காணப்பட்டது.அதன் காரணமாக மக்கள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்பட்டது.மேலும் கொரோனா பரவலின்போது கோடி கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டது.அப்போது எண்ணற்ற மருத்துவர்களும், செவிலியர்களும் உயிர் தியாகம் செய்தனர்.
இந்நிலையில் நேற்று டெல்லியில் துணை முதல் மந்திரி மனீஷ் சிசோடியா தலைமையில் மந்திரிகள் பங்கேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.அப்போது பேசிய மனீஷ் சிசோடியா கூறுகையில் டெல்லியில் பெருந்தொற்றின் பொழுது தங்களின் உயிரை பற்றி கவலை கொள்ளாமல் மனித இனம் மற்றும் சமூகம் பாதுகாக்கப்பட கொரோனா கால களப்பணியாளர்கள் அனைவரும் சுயநலமின்றி பணி புரிந்தனர்.அதில் பலர் உயிர் தியாகமும் செய்துள்ளனர்.
ஆனால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எந்தவொரு தொகை கொடுத்தாலும் அது இழப்பீடு செய்யமுடியாது.இருப்பினும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கும் பொழுது அவர்களுக்கு அந்த தொகை கண்ணியமிக்க வாழ்வை வாழ்வதற்கான அர்த்தம் கட்டாயம் ஏற்படும்.
அதனால் கொரோனா களப்பணியாளர்களின் குடும்பத்தினரின் ஒவ்வொரு தேவைக்கும் அரசு துணையாக நிற்கும் என தெரிவித்துள்ளனர்.அதனால் கொரோனா பெருந்தொற்று பரவல் காலகட்டத்தில் கொரோனா நோயாளிகள் மற்றும் சமூகத்திற்கு கள பணியாற்றி உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ 1 கோடி வழங்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது என கூறினார்.