அதிமுக டிரைவர் வைக்கோலில் ரூ.1 கோடி! சிக்கிய அதிமுகவின் முக்கிய புள்ளி!

0
176
1 crore kept in straw! MLA driver caught red-handed!
1 crore kept in straw! MLA driver caught red-handed!

அதிமுக டிரைவர் வைக்கோலில் ரூ.1 கோடி! சிக்கிய அதிமுகவின் முக்கிய புள்ளி!

தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி இருவரும் தன்னுடன் கூட்டணி கட்சிகளை சேர்த்துக்கொண்டு தேர்தலில் ஈடுபடுவதால் தேர்தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.ஆட்சியைய தக்க வைத்துக்கொள்ளவும்,ஆட்சியை இந்த வருடமாவது பிடிக்க வேண்டும் என்ற  எண்ணத்திலும் கட்சிகள் அனைத்தும் புதிய அறிக்கைகளை வெளியிட்டு மக்களிடம் வாக்குகளை கவர நினைகின்றனர்.

அதனைத்தொடர்ந்து பல நூதன முறையில் வாக்குகளை பெற லஞ்சம் கொடுத்து வருகின்றனர். இதனால் தேர்தல் ஆணையம் பல பறக்கும் படையின் குழுக்களை நியமித்துள்ளது.

அவ்வாறு நியமித்தும் அவர்கள் கண்ணுக்கு மண்ணை தூவி விட்டு சில இடங்களில் பணம் பட்டுவாடா நடந்து வருவது சகஜம் போல ஆகிவிட்டது.அதிலும் குறிப்பாக புதுக்கோட்டை விராலிமலை கலெக்ட்டர்,அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லை தட்டுவது இல்லையாம் என அந்த ஊர் மக்கள் பேசி வருகின்றனர்.ஏனென்றால் அவருக்கு புதுக்கோட்டையில் கலெக்டர் போஸ்டிங் கொடுத்ததே அவர் தான் என பலரும் கூறுகின்றனர்.

புதுக்கோட்டையில் எந்த வித லஞ்ச ஊழல் நடந்தாலும் அதற்கு துணையாக ஐபிஎஸ் மற்றும் ஐஎஎஸ் உள்ளனர் என பலர் தரப்பில் பேசப்படுகிறது.இரு நாட்களுக்கு முன் அதிமுக வேட்பாளர் காரில் லட்சக்கணக்கில் பணத்தை காவலர்கள் கையும் களவுமாக பிடித்தனர்.அந்த பணம் காரினுள் இல்லை காரின் அடியிலிருந்தது என வழக்கை மாற்றி போட்டனர்.அதுமட்டுமின்றி சேலம் அருகே கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது அப்போதும் அதிமுக வின் முக்கிய புள்ளி மாட்டினார்.

அதையும் இந்த தேர்தல் ஆணையம் மற்றும் அரசாங்கம் கண்டுக்கொள்ளவில்லை.அதனைத்தொடர்ந்து தற்போது திருச்சியி மேற்கு தொகுதியில் போலீஸ் காவலர்கள் பதவிகேற்ப பணம் விநியோகம் நடந்துள்ளது.இந்த தகவலை அறிந்த தேர்தல் ஆணையம் அந்த பகுதில் கண்காணிப்பு நடத்தியது.ஆணையர் நடத்திய சோதனையில் கட்டு கட்டாக பணக்கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.அப்போது அங்கு 2 காவல் எழுத்தாளர்கள் மீது  வழக்கு பதிவு செய்த்துளது என்பது குறிப்பிட தக்கது.அதனையடுத்து இன்றும் திருச்சியில் வருமான வரி சோதனையினர் கண்காணிப்பு நடத்தினர்.மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக அமைச்சர் மற்றும் வேட்பாளர் ஆர்.சந்திரசேகர் ஆவார்.

இவரது வீட்டில் ஜேசிபி இயந்திரம் உள்ளது.அந்த இயந்திரத்தை ஓட்டும் ஓட்டுனர்கள் அழகர்சாமி மற்றும் முருகானந்தம்.அவர்களின் வீட்டில் வருமான வரி சோதனையினர் ஆய்வு நடத்தினர்.அதில் அழகர்சாமி வீட்டில் திடீரென்று நள்ளிரவில் வருமான வரி சோதனையினர் ஆய்வு நடத்தினர்.

அப்போது வீட்டில் அருகிலுள்ள வைக்கோல் புதரில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் தாள்களாக ரூ.1 கோடி ரூபாயை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.அதன்பின் அதிகாரிகள் விடிவிடிய அழகர்சாமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.மக்கள் லஞ்சம் பெற்று வாக்கு போடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.