ஆண் பெண்ணின் அந்தரங்க பிரச்சனைக்கு வீட்டில் இருக்கும் இது 1 கைப்பிடி போதும்!!

Photo of author

By Sakthi

ஆண் பெண்ணின் அந்தரங்க பிரச்சனைக்கு வீட்டில் இருக்கும் இது 1 கைப்பிடி போதும்!!

நிலக்கடலை சாப்பிடுவதால் நம் உடலுக்கு பலவிதமான சத்துக்கள் கிடைக்கின்றது. நம் உடலுக்கு தேவையான எண்ணெய் சத்துகள் இந்த நிலக்கடலையின் மூலம் கிடைக்கின்றது. இந்த பதிவில் நிலக்கடலை சாப்பிடுவதால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம்.

 

நிலக்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்…

 

தினமும் ஒரு கைப்படி அளவிற்கு நிலக்கடலையை சாப்பிட்டு வந்தலே உடலுக்கு தேவையான பல நன்மைகள் கிடைக்கின்றது.

 

* நிலக்கடலையில் ரெஸ்லெட்ரால் எனும் மூலப்பொருள் உள்ளது. இந்த மூலப்பொருள் நம் உடலில் இருந்து மூளைக்கு இரத்தம் தடையின்றி செல்ல உதவுகின்றது. இதனால் மூளை வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும்.

 

* நிலக்கடலையில் விட்டமின் பி12 சத்து இருக்கின்றது. இது நியாபக சக்தியையும் புத்திக் கூர்மையையும் அதிகரிக்க உதவுகின்றது.

 

* வயதான காலத்தில் வரக்கூடிய ஐசீமர் நோய் வராமல் தடுக்க நிலக்கடலை சாப்பிடலாம்.

 

* நிலக்கடலை சாப்பிடும் பொழுது ஆணுக்கும் பெண்ணுக்கும் இயற்கையாகவே ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கும்.

 

* ஆண் பெண் மலட்டுத்தன்மை உள்ளவர்கள் தினமும் நிலக்கடலை சாப்பிடும் பொழுது சிறந்த தீர்வை கொடுக்கும்.

 

* நிலக்கடலையை சாப்பிடும் பொழுது தோல் நோய்கள் வராமல் தடுக்கலாம்.

 

* நிலக்கடலையில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் உள்ளது. அதனால் நிலக்கடலையை நாம் சாப்பிடும் பொழுது வயிறு புற்றுநோய் மற்றும் குடல் புற்றநோய் ஏற்படுவதை நாம் தடுக்கலாம்.

 

* நிலக்கடலையில் போலிக் ஆசிட் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் இதை தாராளமாக சாப்பிடலாம். இந்த நிலக்கடலை கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கும் தேவையான சத்துக்களை கொடுக்கின்றது.

 

* நிலக்கடலையை தினமும் சாப்பிடும் பொழுது முடி வளர்ச்சி அதிகமாகும்.

 

* நிலக் கடலையில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் நம் இதயத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றது.

 

* நிலக்கடலையை நாம் சாப்பிடுவதன் மூலம் பித்தப்பை கற்களையும் கரைக்கலாம்.

 

* நிலக்கடலைகள் நாம் சாப்பிடும் பொழுது தசைகள் வலுவடையும். மேலும் எலும்பு, மூட்டு சம்பந்தமான எந்தவொரு நோயும் வராது.

 

* நிலக்கடலை சாப்பிடுவதன் மூலம் நமக்கு ஏற்படும் முதுகு வலி, இடுப்பு வலி போன்ற பிரச்சனைகளையும் சரி செய்யலாம்.

 

இதனால் நீங்கள் தினமும் ஒரு கைப்பிடி அளவு நிலக்கடலை சாப்பிட்டு இந்த நன்மைகள் அனைத்தும் பெற்று ஆரோக்கியமாக இருங்கள்.