மாணவர்களுக்கு தலா ஒரு லட்சம் அரசு நிதியுதவி! வெளியான அட்டகாசமான அறிவிப்பு
வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை, தொழில் முனைவோராக்கும் திட்டத்திற்கான காலியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதுகுறித்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களை, தொழில் முனைவோராக்கும் திட்டத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு, மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் அரசு மானியமாக, ஆறு மாணவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குகிறது.
இதற்கு இந்த மாவட்டத்திலுள்ள கிராம பஞ்சாயத்துக்களில், வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டம் பெற்ற, 21 முதல், 40 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் பின்னேற்பு மூலதன மானியமாக வழங்கப்படும். பத்தாவது மற்றும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பிற்கான சான்றிதழ் ஆகியவற்றை இத்துடன் இணைக்க வேண்டும்.
இதுமட்டுமில்லாமல் விண்ணப்பிக்கும் நபர் துவங்க முடிவெடுத்துள்ள தொழில் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை, ஆதார் நகல், நேஷன் கார்டு நகல், பேங்க் பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பங்களை, அக்ரிஸ்நெட் (Agrisnet) இணைதளத்தில் வரும், 19 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு, தங்களது பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் அதில் தெரிவித்துள்ளார்.