லட்சுமி கடாட்சத்தை பெருக்கும் குங்குமம்! பெண்களே இது உங்களுக்கா!

0
102

லட்சுமி கடாட்சத்தை பெருக்கும் குங்குமம்! பெண்களே இது உங்களுக்கா!

அன்பு, அழகு, ஆன்மிகம், அறிவியல், பக்தி என பஞ்ச பரிமாணத்தின் குறியீடாக விளங்வது குங்குமம் தான். இந்திய சமூகத்தில் குங்குமத்திற்கு அதீத முக்கியத்துவம் வழங்குகின்றனர். திருமணமான பின் இந்திய பெண்கள் குறிப்பாக இந்து பெண்கள் குங்குமத்தை நெற்றி வகிட்டில் வைப்பது வழக்கம்.

குங்குமத்தின் நிறமான சிவப்பு என்பது மகாசக்தி பார்வதி தேவியின் அம்சமாகும். பெண்கள் குங்குமத்தை வைத்து கொள்கின்ற போது தேவியின் பரிபூரண அருளை பெறுவதாகவும் கூறப்படுகிறது.

திருமண பந்தத்தின் அடையாளமாக பெண்கள் அணியும் மாங்கல்யம், பெண்களின் நெற்றி, பெண்களின் தலை வகிட்டு பகுதியான சீமந்தபிரதேசம் ஆகிய மூன்று இடங்களிலும் மகாலட்சுமி தேவி வாசம் செய்கிறாள்.

இந்த இடங்களில் பெண்கள் குங்குமத்தை வைத்து கொள்வதால், லட்சுமி தேவியின் அருளை முழுமையாக பெற முடியும். மேலும் வீட்டில் உள்ள தரித்திர நிலை விலகும். நாம் செய்யும் சேமிப்பு எந்த நிலையிலும் கரையாது. பெண்களின் வாழ்க்கையில் நிறந்தர லட்சுமி கடாட்சம் உண்டாகி, திருஷ்டி தோஷம் நீங்கும்.

தெய்வீகத்தன்மை, சுபத்தன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் வைத்து கொள்வதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும். வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பதால், கொடுப்பவர் மற்றும் பெறுபவர் இருவருக்குமே மாங்கல்ய பலம் பெருகும்.

பெண்கள் ஒருவருக்கு குங்குமத்தை கொடுக்கும் முன்பாக, தாங்கள் இட்டு கொண்ட பிறகே கொடுக்க வேண்டும். ஆண்கள் இரு புருவங்களையும் இணைத்தார் போல் உள்ள இடத்தில், குங்குமத்தை வைப்பது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

கட்டை விரலால் குங்குமம் வைப்பது மிகுந்த துணிவை கொடுக்கும். ஆள்காட்டி விரலால் குங்குமம் வைப்பதால் முன்னனித்தன்மை, நிர்வாகத்தன்மை, ஆளுமைத்தன்மை போன்றவற்றை ஊக்குவிக்கும். நடு விரலால் குங்குமம் வைப்பதால் தீர்க்க ஆயுளை கொடுக்கும். மோதிர விரலால் குங்குமம் வைப்பதால் நேர்மையாக இருக்க கூடிய குணமும், துணிச்சலும் அதிகரிக்கும்.

மூளைக்கு செல்லும் நரம்புகள் அனைத்தும் நெற்றி பகுதியின் வழியாக செல்வதால் அவைகளை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால், குங்குமம் இட்டுக் கொண்ட எவரையும் வசியம் செய்வது கடினம். மேலும் குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும்.

 

 

author avatar
Parthipan K