வங்கி கணக்கில் வருடம் 1 லட்சம்!! தபால் நிலையத்தில் அலைமோதும் பெண்கள் கூட்டம்!!

Photo of author

By Rupa

வங்கி கணக்கில் வருடம் 1 லட்சம்!! தபால் நிலையத்தில் அலைமோதும் பெண்கள் கூட்டம்!!

நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொடங்கி இன்று ஏழாவது கட்டமாக வாரணாசி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.இன்றுடன் தேர்தல் முடிவடைய உள்ள நிலையில் தற்போது வரை பெங்களூரில் தபால் அலுவலகத்தில் பெண்கள் கூட்டம் குறையவில்லை.பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் இந்தியா கூட்டணியை உருவாக்கியது.பாஜகவை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து கட்சிகளும் மும்மரம் காட்டி வருகின்றனர்.

அவ்வாறு காங்கிரஸ் மக்களை கவரும் வகையில் பல்வேறு அறிக்கைகளை இந்த தேர்தலில் வெளியிட்டுள்ளது.அதிலும் குறிப்பாக தாங்கள் இந்த தேர்தலில் வெற்றியடைந்து விட்டால் ஏழை எளிய பெண்களுக்கு வருடம் தோறும் ஒரு லட்சம் வழங்குவதாக தெரிவித்துள்ளது.மேலும் இந்த ஒரு லட்சம் பணமானது பெண்களுக்கு தபால் கணக்கு மூலம் செலுத்தப்படும் என்ற தகவலால் பெண்கள் புதிய கணக்கு திறக்க தபால் நிலையத்தை நாடியுள்ளனர்.

தினம்தோறும் கட்டுக்கடங்க முடியாத பெண்களின் கூட்டம் தபால் அலுவலகங்களில் அலை மோதுகிறதாம்.இதனால் பெண்களுக்கு டோக்கன் முறைப்படி கணக்கை திறந்து வருவதாக நிர்வாகிகள் கூறுகின்றனர்.இந்த புதிய கணக்கை திறப்பதற்காக பெண்கள் தபால் நிலையத்தை காலை நான்கு மணிக்கே வந்து விடுவதாகவும் இதற்கென்று தனி கவுண்டர்கள் வைத்து செயல்பட்டு வருவதாகவும் அலுவலக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி அங்கு வரும் பெண்கள் காங்கிரஸ் வெற்றி பெற்றால் கட்டாயம் ஏழை எளிய பெண்மணிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.அதற்காகவே தற்பொழுது சேமிப்பு கணக்கை தொடங்குவதாக கூறுகின்றனர்.காங்கிரஸ் மேற்கொண்டு வெற்றி பெறவில்லை என்றால் இப்பெண்களுக்கு ஏமாற்றத்தையே அளிக்கும்.