வேலைக்கு போகாமலே ஒரு லட்சம் வாங்கலாம்! நீங்களும் லட்சாதிபதிதான்?

0
141

வேலைக்கு போகாமலே ஒரு லட்சம் வாங்கலாம்! நீங்களும் லட்சாதிபதிதான்?

“உழைச்சாதானே காசு” வேலைக்கு போகாமலே எப்படி லட்சம் கிடைக்கும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இதுதான் ஒரு நாட்டின் நடைமுறையாக உள்ளது.

உலகத்திலேயே மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடு எது என்று 2012 ல் ஒரு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு 156 நாட்டு மக்களை சந்தித்து பேசி அதன்மூலம் நடைமுறை தகவல்களை ஒரு நிபுணர் குழு சேமிக்கிறது.  அதை வைத்து அம்மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்று ஒரு பட்டியலைத் தயார் செய்கிறார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பின்லாந்து மட்டுமே இரண்டு முறை முதலிடத்தை பிடித்துள்ளது. World Happiness Index Report ஐ அடிப்படையாக வைத்து முதல் இடங்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறது. மகிழ்ச்சியான நாடுகளின் முதல் இடங்களை வட ஐரோப்பா மற்றும் வட அட்லாண்டிக் நாடுகளே பட்டியலை நிரப்புகிறார்கள். வல்லரசு நாடான அமெரிக்காவே 19 வது இடமாம்.

அயல் நாடான டென்மார்க்கில் ஒரு நாளைக்கு சராசரி 7.5 மணி நேரம்தான் வேலை பார்ப்பார்களாம். வேலை நேரத்திற்கு இடையில் தேவையில்லாத ஓய்வோ, வெட்டி அரட்டையோ செய்வதில்லையாம். வேலை முடித்துவிட்டு ஊழியர் நண்பர்களோடு வெளியே செல்வதும் மிக குறைவுதான். குறித்த நேரத்தில் தரமாக வேலையை முடித்துவிடுகிறார்களாம்.

பின்லாந்து போன்ற நாடுகளில் வாரத்தில் ஒருநாள் ஆபிஸ் போகாமல் வீட்டிலேயே வேலை செய்யும் வழிமுறையை பின்லாந்து அரசு வழிவகுத்துள்ளது. அதே சமயம் விடியற்காலை மூன்று மணிக்கே வேலையை தொடங்குவதும், கமிட்மண்ட் இருந்தால் வேலையை மூன்று மணி நேரம் தள்ளிப் போடுவதற்கும் சட்டத்தில் இடம் இருக்கிறதாம்.

வேலை பறிபோனாலோ அல்லது வேலையை கைவிட்டாலோ அடுத்த வேலை வாய்ப்பை பெறுவதற்கு அரசே தேவையான கல்வி உதவி, கவுன்சிலிங், பட்டப் பயிற்சியும் தருகிறது. டென்மார்க் போன்ற நாடுகளில் வேலையில் “மன அழுத்தம்” இருப்பதை  சொன்னால் போதும் மாதம் 2000 அமெரிக்க டாலர் (நமது ரூபாய் மதிப்பில் 1.4 லட்சம்) கொடுத்து மன அழுத்தத்தில் இருந்து வெளிவர சொல்வார்களாம்.

இந்தியாவில் பகல், இரவாக  வேலை செய்தாலும் பலருக்கு போதிய வருமானம்  கிடைப்பதில்லை. டென்மார்க் போன்ற நாடுகளில் பிறந்திருந்தால் நீங்களும் லட்சாதிபதிதான்.

Previous articleமுருகதாஸுக்கு இதே வேலை தான்! கடுப்பான ரசிகர்கள்
Next articleகையைக் கடிக்கும் தர்பார் வசூல் – விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி !