சிந்துவெளி நாகரிக எழுத்து முறை தெரிந்தால் 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு!! முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு!!

சிந்து சமவெளி நாகரிகமானது துவங்கிய காலகட்டத்தில் 10 முதல் 50 லட்சம் மக்களை தன்னகத்தை கொண்டிருந்ததாக வரலாறு கூறுகின்றன. மேலும் இந்த சிந்து சமவெளி நாகரிகங்களில் அவற்றுடைய நகரங்கள் முறையான நகரத் திட்டமிடல், செங்கல் வீடுகள், நுட்பமான கழிவுநீர் வெளியேற்றும் அமைப்புகள் மற்றும் கைவினைப் பொருட்கள் என பல வேறுபட்ட உலோகவியல் நுட்பங்கள் போன்றவற்றை பயன்படுத்துவது ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட சிந்து சமவெளி நாகரீகத்தின் நூற்றாண்டு விழா சமீபத்தில் நடைபெற்றது ஒட்டி முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்துமுறைகளை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தெரிவிப்பவர்கள் அல்லது ஏதேனும் அமைப்பு இதனை எடுத்துரைக்கும் எனில் அவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்கன் டாலர் பரிசாக வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு கருத்தரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். அவரைத்தொடர்ந்து சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் ஆன இந்திய தொல்லியல் கழகத்தின் மேனாள் இயக்குநர் சர் ஜான் மார்ஷல் சிலைக்கு அடிக்கல் நாட்டினார்.

முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இந்த நிகழ்ச்சியை துவங்கி வைத்து கூறியதாவது :-

சிந்து சமவெளி பண்பாட்டின் உடைய எழுத்து முறையை கண்டறிந்து அவற்றை அனைவருக்கும் புரியும் வகையில் எடுத்துரைக்கும் தனிநபர் அல்லது அமைப்பினருக்கு ஒரு மில்லியன் அமெரிக்கன் டாலர் பரிசாக வழங்கப்படும் என்று கூறியவர், 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பொழுது எங்களது கட்சிக்கு திராவிட மாடல் என்று பெயர் சூட்டினோம் எனக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, திராவிட மாடல் அரசு, ஒரு கட்சியின் அரசு அல்ல, இனத்தின் அரசு. ஆரியமும் சமஸ்கிருதமும் தான் இந்தியாவின் மூலம் என தெரிவித்திருக்கிறார். மேலும் , சிந்துவெளியில் இருந்த காளைகள் திராவிடத்தின் சின்னம். தாமிரபரணி நாகரீகம் 3,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.