நாளை முதல் மாணவர்களுக்கு 1 மாத கால விடுமுறை!! வெளியான திடீர் அறிவிப்பு!!

Photo of author

By Rupa

நாளை முதல் மாணவர்களுக்கு 1 மாத கால விடுமுறை!! வெளியான திடீர் அறிவிப்பு!!

ஒவ்வொரு மாநிலத்திலும், பாடத்திட்டத்தில் மற்றும் விடுமுறை நாட்களில் பல மாற்றங்கள் காணப்படும்.அந்த வகையில் இமாச்சல பிரதேசத்தில் கோடை விடுமுறையானது  ஜூன் மாதம் ஆரம்பித்து ஜூலை மாதம் முடியுமாறும் அதுவே குளிர்கால விடுமுறையானது ஜனவரியில் ஆரம்பித்த பிப்ரவரி யில் முடியும்படி நடைமுறையில் உள்ளது.

இதுவே தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கோடை விடுமுறையானது மே மாதமே முடிவடைந்து விடும்.ஜூன் மாதம் பள்ளிகள் ஆரம்பித்து பாடங்கள் எடுக்கப்படும்.ஆனால் இந்த ஹிமாச்சால-வில்  விடுமுறையானது நீண்ட நாட்கள்  நீட்டிப்பதாக பல புகார்கள் ஆசிரியர்கள் சங்கத்திலிருந்து முன்வைத்தனர்.இதனை மாற்றி அமைக்க்குமாறும் பள்ளிகளை முன்கூட்டியே திறக்கும் படியும் தெரிவித்திருந்தனர்.

கோரிக்கைகள் வைத்ததின் பொருட்டு இது குறித்து ஆலோசனையும் நடைபெற்றது. மேற்கொண்டு அக்கல்வித் துறை செயலாளர் கூறுகையில், நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தற்போது விடுமுறையில் மாற்றம் செய்தால் காலநிலைக்கேற்ப மாணவர்களால் பள்ளிக்கு வர இயலாது.அதுமட்டுமின்றி மாணவர்களின் கோடை விடுமுறையை கணித்தே அவர்களுக்கான அடுத்தடுத்த திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விடுமுறையில் மாற்றம் வருமாயின் கட்டாயம் திட்டத்தில் பல குளறுபடிகள் நடக்கும் எனவே விடுமுறை அட்டவணையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என கூறியுள்ளார்.இதனையொட்டி வரும் ஜூன் 22 ஆம் தேதி முதல் கோடைகால விடுமுறை தொடங்க உள்ளது. மேற்கொண்டு ஜூலை 30ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவித்துள்ளனர்.