+1 மாணவர் சேர்க்கையின் இட ஒதுக்கீடு! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு!
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் மேல்நிலைப் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு முறையை அறிவித்துள்ளார். இட ஒதுக்கீடு சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட பகுதியைச் சார்ந்த மக்களுக்கு கல்வி மற்றும் வேலை நிலையங்களின் ஓரளவு இடங்களை ஒதுக்கி காலப்போக்கில் சமுதாய சமத்துவத்தை ஏற்படுத்தும் திட்டம் ஆகும். அப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் இனம் ,ஜாதி, மொழி ,பால் ,வசிப்பிடம் பொருளாதார சூழல் உடல் ஊனமுற்றோர் போன்ற முறைகளில் இருக்கலாம். இந்தியாவில் பல ஜாதிகளுக்கு படிப்பு உரிமைகள் மறுக்கப்பட்டு சமூக தாழ்நிலையில் அமர்த்தப்பட்டனர். இந்தியாவின் கிராமப்புற மக்கள் புதிய பொருளாதார வணிக வளர்ச்சியுற்ற காலத்திலும் பலர் படிப்பு வேலைவாய்ப்புகள் பெறாமல் இருக்கின்றனர். இதனால் அந்த கடிதத்தில் ‘இட ஒதுக்கீடு’ தொடர்பான சட்டங்களின்படி 2022- 23ஆம் ஆம் கல்வியாண்டில் மேல்நிலை கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். அதில் அனைத்து வகை பள்ளிகளில் பழங்குடியினர், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு விகிதத்தை கடைபிடிக்க வேண்டும்.
இட ஒதுக்கீடு பழங்குடியினர் 1%,ஆதிதிராவிட 18%(இதில் ஆதிதிராவிட அருந்ததியர்கள் மாணவர்களுக்கு 3% முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 20%,பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் 3.5%, பிற்படுத்தப்பட்டோர் 26.5% . மாணவர் சேர்க்கையின் போது பொதுபிரிவினர்கான 31% என அந்தந்த இடத்திற்காக பட்டியலை முதலில் தயாரிக்கவேண்டும். இப்பட்டியலில் மாணவர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே முன்னுரிமை வழங்க வேண்டும். இதில் இட ஒதுக்கீடு முறையில் எவ்வித பாகுபாடுமின்றி மாணவர்களை சேர்க்க வேண்டும். மாநிலத்தில் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளிலும் பாடப் பிரிவு வாரியாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு மேல்நிலைக்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.