1 வயது குழந்தை! இத்தனை மர்ம நபர்களா? தீவீர தேடுதல் பணியில் போலீசார்!
சமீப காலமாக தொடர்ந்து கொலை கொள்ளை சம்பவம் அரங்கேறி வண்ணமாக தான் உள்ளது. இத்துடன் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிப்பது வழக்கமாக கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில்,சத்திய புரத்தில் மனதை பதற வைக்கும் சம்பவம் நடைபெற்றுள்ளது. மதுரையை சத்தியபுரம் என்ற பகுதியில் வசித்து வருபவர் தான் கோபி. இவர் தனது அன்றாட வேலைகளை முடித்துவிட்டு அவரது வீட்டில் தன் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது நள்ளிரவில் கோபி வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.
அவ்வாறு புகுந்த மர்ம நபர்கள் கோபியின் ஒரு வயது குழந்தையான இவ்வாய்வின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்ட ஆரம்பித்து உள்ளனர். நகையை கொடுக்கவில்லை என்றால் குழந்தையை கொன்று விடுவோம் என கூறி மிரட்டியுள்ளனர். கூச்சல் இட்டாலும் குழந்தையை கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். குழந்தையின் உயிரை காப்பாற்ற மர்ம நபர்கள் கூறியதை கோபி கேட்க ஆரம்பித்துள்ளார். அதனை எடுத்து மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 75 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் அத்தோடு வெள்ளி பொருட்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மர்ம நபர்கள் சென்றதும் கோபி பதற்றத்துடன் காவல்துறைக்கு அழைப்பு விடுத்து புகார் அளித்தார். கோபி புகார் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு காவல் அதிகாரிகள் கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் வந்தனர். கோபி வீட்டில் கைரேகை நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். மேலும் போலீசார் இந்த கொலை சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை பணம் வெள்ளிப் பொருட்கள் கொள்ளை அடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி தற்போது அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.குழந்தையின் உயிரை துட்சமென நினைத்த அந்த மனசாட்சியற்ற மர்ம நபர் பிராணிகளை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

