1  வயது குழந்தையை சுட்ட 3  வயது கொலையாளி!!  விளையாட்டு விபரீதமான பகீர் நிகழ்வு!! 

Photo of author

By Amutha

1  வயது குழந்தையை சுட்ட 3  வயது கொலையாளி!!  விளையாட்டு விபரீதமான பகீர் நிகழ்வு!! 

அமெரிக்கா நாட்டில் ஒரு வயதான தனது சகோதரியை 3 வயது குழந்தை தவறுதலாக சுட்டு கொன்ற பகீர் சம்பவம் நடைபெற்றுள்ளது.

அமெரிக்க நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகணத்தில் சான் டியாகோ கவுண்டியில் உள்ள பால்புரூக்கில் இந்த பகீர் சம்பவம் நடந்தேறியுள்ளது. அங்கு உள்ள ஒரு வீட்டில் 3 வயது குழந்தை ஒன்று துப்பாக்கியை வைத்து விளையாடி கொண்டிருந்தது. அப்போது தவறுதலாக வீட்டில் இருந்த ஒரு வயது சகோதரியின் தலைப்பகுதியில் சுட்டுள்ளது. இதில் அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

நடந்த சம்பவம்  குறித்து அமெரிக்க காவல்துறை கூறுகையில்,”காவல் நிலையத்திற்கு ஒரு  குழந்தை போன் செய்து உள்ளது. அந்த அழைப்பிற்கு பதிலளித்த போலீசார்  சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, 3 வயது குழந்தை ஒன்று தவறுதலாக விளையாடும் போது 1 வயது சகோதரியின் தலையில் துப்பாக்கியால் சுட்டுள்ளது தெரியவந்தது. துப்பாக்கிச் சூட்டில் காயம் ஏற்பட்டு  காயத்தால் சுயநினைவின்றி இருந்த குழந்தையை மீட்டு பலோமர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் எற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்” என்று காவல்துறையினர் கூறி உள்ளனர்.

மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்பற்று வைத்திருந்த துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர். அந்த குழந்தையின் நலன் கருதி அவரின் பெயர் விவரங்கள் எதையும் போலீசார் வெளியிடவில்லை.