10 நாள் தினமும் 1 சொட்டு போதும் கருவளையம் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போகும்!!
நம்மில் பலருக்கு கண்களை சுற்றி கருவளையம் இருக்கும். இது நம் முகத்தின் அழகை பாதிக்கும். இரவில் அதிக நேரம் கண்விழிப்பதால் இந்த கருவளையம் ஏற்படுகிறது. மேலும் ஊட்டச் சத்து குறைபாடு காரணமாகவும் இந்த கருவளையம் ஏற்படுகின்றது. இந்த கருவளையத்தை முழுவதுமாக மறையச் செய்ய இந்த பதிவில் அருமையான மருந்தை எவ்வாறு தயார் செய்து எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்…
* உருளைக் கிழங்கு
* கற்றாழை ஜெல்
* விட்டமின் ஈ மாத்திரை அல்லது விளக்கெண்ணெய்
இந்த மருந்தை தயார் செய்யும் முறை…
எடுத்து வைத்துள்ள உருளைக் கிழங்கை கழுவி அதன் மேல் இனுக்கும் தோலை நீக்கி எடுத்துக் கொள்ளவும். பிறகு இந்த உருளைக் கிழங்கை நன்கு துருவி எடுத்துக் கொள்ளவும்.
துருவி வைத்துள்ள உருளைக் கிழங்கை ஒரு வடிகட்டியை பயன்படுத்தி நன்கு அழுத்தி வடிகட்டினால் உருளைக் கிழங்கு சாறு கிடைக்கும்.
ஈரம் இல்லாத சில்வர் அல்லது கண்ணாடி பாட்டில் காற்று புகாத அளவு உள்ள பாட்டிலை எடுத்துக் கொள்ளவும். இந்த பாட்டிலில் ஒரு ஸ்பூன் அளவு கற்றாழை ஜெல்லை சேர்த்துக் கொள்ளவும்.
அடுத்ததாக இதில் விட்டமின் ஈ மாத்திரை ஒன்றை சேர்த்துக் கொள்வும். அதாவது இந்த மாத்திரையை இரண்டாக வெட்டி அதில் இருக்கும் மருந்தை இந்த கற்றாழை ஜெல்லுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். விட்டமின் ஈ மாத்திரை கிடைக்கவில்லை என்றால் விளக்கெண்ணெய் 2 அல்லது 3 செட்டுகள் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
கடைசியாக எடுத்து வைத்துள்ள உருளைக் கிழங்கு சாறையும் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மூன்றிலிருந்து நான்கு ஸ்பூன் அளவு உருளைக் காழங்கு சாறை இதில் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.
இந்த மருந்தை குளிர்சாதனப் பெட்டியில்(Fridge) வைத்து பயன்படுத்தலாம். ஒரு வாரம் வரை இது கெட்டுப் போகாமல் இருக்கும்.
இந்த மருந்தை பயன்படுத்தும் முறை…
இரவு தூங்கச் செல்லும் முன்பு முகத்தை நன்கு கழுவி விட்டு துடைத்துக் கொள்ளவும். பிறகு இந்த மருந்தை சிறிதளவு எடுத்து கண்களைச் சுற்றி தடவிக் கொள்ளவும்.
மாசஜ் செய்யத் தேவையில்லை. இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும். மறுநாள் காலையில் முகத்தை கழுவி விட வேண்டும்.
இதை தொடர்ந்து 5 நாட்கள் செய்ய வேண்டும். முடிந்த வரை ஒரு நாளுக்கு இரண்டு முறை பயன்படுத்தலாம். அதாவது காலை வேலையிலும் இந்த மருந்தை எடுத்து கண்களை சுற்றி தடவி விட்டு சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம்.
இதனை தொடர்ந்து 5 நாட்கள் செய்யும் பொழுது கருவளையம் மறையத் தொடங்கும். கண்களும் நன்கு தெரியும்.
இதில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருள்களின் பலன்கள்:
* உருளைக் கிழங்கு:
உருளைக் கிழங்கில் அதிகமான அளவு அசிடிக் ஆசிட் உள்ளது. இந்த ஆசிட் நம் கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை விரைவாக மறையச் செய்ய பயன்படுகிறது. அது மட்டுமில்லாமல் கண்களுக்கு கீழ் பை போன்று அமைப்பு உருவாகும். அந்த அமைப்பையும் இது சரி செய்யும். கண் சுருக்கத்தையும் சரி செய்யும்.
* கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லானது கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை மீண்டும் வராமல் தடுக்கும். கண்களுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். மேலும் கண்களை பளபளப்பாகவும் மாற்றும்.
* விட்டமின் ஈ ஆயில்
விட்டமின் ஈ ஆயில் கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை மறையச் செய்யும். அந்த இடத்தில் இரத்த ஓட்டம் மேம்படையும்.