உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் 10 சிறந்த இரவு உணவுகள்! இதையெல்லாம் தவிர்த்திடுங்கள்!!

0
173

 

உடல் ஆரோக்கியத்திற்கு மூன்று வேளை உணவு அவசியமான ஒன்று.உடலை நோயின்றி சீராக வைத்துக் கொள்ள உணவுமுறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.காலையில் அதிக கலோரி நிறைந்த உணவுகள் மற்றும் இரவு நேரத்தில் மிகவும் குறைவான கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

 

இரவு நேரத்தில் எளிதில் செரிமானம் ஆகக் கூடிய ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.ஆகவே உணவை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.இரவு நேரத்தில் செரிமானம் ஆகாத உணவுகள்,எண்ணெய் உணவுகள்,கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

 

இரவில் சில உணவுகளை எடுத்துக் கொண்டால் அது உங்களது தூக்கத்தை பாதித்துவிடும்.இரவு நேரத்தில் முட்ட முட்ட சாப்பிடாமல் கார்ப்ஸ் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.தயிர்,அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

 

முளைகட்டிய தானியம்,காய்கறிகள்,சாலட்,பனீர் உணவுகள்,காய்கறி சூப்,சப்பாத்தி,சிறு தானிய கிச்சடி,வேக வாய்த்த முட்டை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.ஆனால் இரவு நேரத்தில் சாதம்,அதிக காரம்,கொழுப்பு,அதிக உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

 

நகாலை நேரத்தில் உண்ணும் உணவின் அளவை விட குறைவான அளவு உணவை இரவு நேரத்தில் உட்கொள்ள வேண்டும்.இரவில் கலோரிகள் குறைந்த உணவுகள் உட்கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

Previous articleஉடற்பயிற்சி இல்லாமல் தண்ணீர் குடித்தே சுலபமான முறையில் உடல் எடையை குறைக்கலாம்!! 
Next articleபுதிய ரேஷன் அட்டை பெற்றவர்களுக்கு மாதம் ரூ 1000 எப்பொழுது கிடைக்கும்!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!