தினமும் காலை நேரத்தில் ஒரு பல் பச்சை பூண்டு சாப்பிட்டு வந்தால் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.பூண்டு உணவில் சேர்க்கப்படும் மருத்துவம் கொண்ட பொருளாகும்.
இந்த பூண்டு பற்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.பல் பாதிப்பு முதல் வயிறு சம்மந்தபட்ட பிரச்சனைகள் வரை அனைத்தையும் சரி செய்ய இந்த பூண்டு பற்கள் உதவுகின்றது.உஙகள் உணவில் பூண்டு பற்களை சேர்த்துக் கொண்டால் செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.இது தவிர பூண்டு பற்களை உட்கொண்டால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு பல் பூண்டு பற்களை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்:
1)மோசமான உணவுகளால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக படிகிறது.இந்த தேவையில்லாத கொழுப்புகளை கரைத்து வெளியேற்ற பூண்டு பற்களை உட்கொள்ளலாம்.
2)இரத்தத்தில் கலந்து நச்சுக் கழிவுகளை வெளியேற்ற பூண்டு பற்களை காலை உணவிற்கு முன் உட்கொள்ள வேண்டும்.
3)பற்களில் படிந்துள்ள கறைகள் நீங்க பூண்டு பற்களை அரைத்து தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்கலாம்.
4)தினமும் ஒரு பூண்டு பல் சாப்பிடுவதால் உடலில் புற்றுநோய் அபாயம் ஏற்படாமல் இருக்கும்.
5)மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த பச்சை பூண்டு பல்லை வெறும் வயிற்றில் உட்கொள்ளலாம்.
6)மன அழுத்தம்,மன உளைச்சல் நீங்க வெள்ளை பூண்டு பற்களை தண்ணீரில் கொதிக்க வைத்து தேநீர் போன்று பருகலாம்.
7)இரத்த அழுத்தம் இருப்பவர்கள் பூண்டு பற்களை மென்று சாப்பிட்டால் பிபி கட்டுப்படும்.இதய ஆரோக்கியம் மேம்பட பூண்டு பற்களை மென்று சாப்பிடலாம்.
8)பூண்டு பற்களில் உள்ள அல்லிசின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.தொப்பை கொழுப்பை கரைக்க வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடலாம்.
9)செரிமானப் பிரச்சனை சரியாக தினமும் ஒரு பல் பூண்டு உட்கொள்ளலாம்.காசநோய் பாதிப்பால் அவதியடைந்து வருபவர்கள் தினமும் பூண்டு சாப்பிடலாம்.
10)சளி,இருமல் பாதிப்பு இருப்பவர்கள் பூண்டு பற்களை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.