நாம் சாப்பிடும் சிற்றுண்டி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.முன்பெல்லாம் முளைகட்டிய பயறு,பொரித்த கடலை,அவித்த கடலை போன்றவற்றை ஸ்நாக்ஸாக செய்து சாப்பிட்டு வந்தோம்.இந்த ஸ்நாக்ஸ் உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடியவையாக இருந்தது.
இதில் கொண்டைக்கடலை அதிக புரதம் நிறைந்த ஸ்நாக்ஸ் ஆகும்.இந்த கொண்டைக்கடலையில் அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.கொண்டைக்கடலையில் நார்ச்சத்து,புரதம்,வைட்டமின்கள்,தாதுக்கள் உள்ளிட்டவை அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.
அசைவத்திற்கு இணையான சத்துக்களை கொண்டிருக்கும் கொண்டைக்கடலையை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு என்ன மாதிரியான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.தினமும் ஒரு கைப்பிடி கொண்டைக்கடலை சாப்பிட்டால் இரத்த அழுத்தப் பிரச்சனை சரியாகும்.
இதய ஆரோக்கியம் மேம்பட தினமும் ஒரு கைப்பிடி கொண்டைக்கடலை சாப்பிடலாம்.கொண்டைக்கடலையில் பைபர்,இரும்பு,வைட்டமின் பி அதிகமாக நிறைந்திருக்கிறது.கொண்டைக்கடலை சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.1 கப் கொண்டைக்கடலையில் கிட்டத்தட்ட 12 கிராம் அளவிற்கு நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை சரியாக தினமும் கொண்டைக்கடலை உட்கொள்ளலாம்.எலும்பு ஆரோக்கியம் மேம்பட கொண்டைக்கடலை சாப்பிடலாம்.இதில் இருக்கின்ற கால்சியம் சத்து எலும்பு வலிமையை அதிகரிக்கிறது.
நீண்ட நாள் மலச்சிக்கல் பிரச்சனையை சந்தித்து வருபவர்கள் காலையில் எழுந்ததும் ஒரு கைப்பிடி கொண்டைக்கடலை சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் மலம் வெளியேறும்.குடல் ஆரோக்கியம் மேம்பட தினமும் கடலை சாப்பிட வேண்டும்.இரத்தத்தில் இருக்கின்ற ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க கொண்டைக்கடலை சாப்பிடலாம்.இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க கொண்டைக்கடலை சாப்பிடலாம்.