இனி இது கடைகளில் இருந்தால் 10 லட்சம் அபராதம்!! உணவு வழங்கல் துறை அதிரடி நடவடிக்கை!!
இன்றைய பேஷன் காலகட்டத்தில் உடலுக்கு ஆரோக்கியமற்ற பல உணவு பழக்க வழக்கங்கள் அதிக அளவு ட்ரெண்டாகி வருகிறது.அதில் ஒன்றுதான் ஸ்மோக் பிஸ்கட் மற்றும் ஸ்மோக் ஜூஸ் போன்றவை ஆகும். நாம் பிஸ்கட் அல்லது ஜூஸை சாப்பிடும் பொழுது நமது வாயிலிருந்து ஒரு வித ஸ்மோக் வெளியேறும் இது திரவ நைட்ரஜன் மூலம் உண்டாகிறது.
குழந்தைகள் மற்றும் பெரியவர்களை அனைவரையும் கவரும் வகையில் இது இருப்பதால் பலரும் இதனை வாங்கி உட்கொள்கின்றனர்.இந்த திரவ நைட்ரஜன் ஆனது மிகவும் குளிரூட்டிய நிலையில் இருக்கும்.இதில் வேதிவினை நடந்து அறைவெப்பநிலையில் ஸ்மோக்காக வெளியேறுகிறது.இதனை பொதுமக்கள் குழந்தைகள் என பலரும் ஆர்வமாக கண்டு வீடியோ போன்றவற்றை பதிவிடுவதற்காகவே வாங்கி சாப்பிடுகின்றனர்.
இதே போல தற்பொழுது கர்நாடகாவில் சிறுவன் ஒருவர் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்டுட்டு கட்டுக்கடங்காத வயிற்று வலியால் அவதிப்பட்டு உள்ளார்.அந்த வீடியோவும் இணையத்தில் தீயாக பரவியது.மேற்கொண்டு இது குறித்து உணவு வழங்கல் பாதுகாப்பு துறையானது எச்சரிக்கை விடுத்துள்ளது.அதாவது இந்த திரவ நைட்ரஜனை உபயோகிப்பதால் அதில் இருக்கும் அதிகப்படியான குளிரானது நமது உணவுக் குழல் என தொடங்கி அனைத்தையும் உறைய வைத்து விடும்.
அத்தோடு இது குழந்தைகள் பெரியவர்கள் என பலருக்கும் பேசும் திறன் என தொடங்கி கண் பார்வை வரை பாதிப்படைய செய்ய அதிக வாய்ப்புள்ளது.இது நாளடைவில் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்பதால் எந்த ஒரு உணவுப் பொருட்களுடனும் இதனை பயன்படுத்தக்கூடாது என்று தடை விதித்துள்ளனர்.
அதனையும் மீறி பயன்படுத்தினால் அவர்கள் மீது 10 ஆண்டுகள் சிறை மற்றும் 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி பெரிய மாநகரங்களில் இது அதிக புழக்கத்தில் இருப்பதால் அதிகாரிகள் அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்யும்படி ஆணை விடுத்துள்ளனர்.