தனிநபர் வங்கிக் கணக்கில் 10 லட்சத்துக்கு மேல் இருந்தால் கண்காணிக்கப்படுவீர்! வருமானவரித்துறை எச்சரிக்கை!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி மாநிலத்தின் வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் இரவிச்சந்திரன் ராமசாமி பேட்டியளித்தார்.
தமிழகம்-புதுச்சேரியில் 2022-2023 ஆம் நிதியாண்டில் ரூபாய் 1,08,364 கோடி வருமான வரிவசூல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.மேலும் ரூபாய் 1,05,300 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக கூறிய அவர் வருமான வரி வசூல் வரி வசூல் ரூபாய் 3000 கோடி அதிகமாக கிடைத்துள்ளது என்று கூறினார்.
இந்த வரிவசூல் இந்திய அளவில் 18 சதவீகிதம் உயர்ந்துள்ளது, மேலும் இந்திய அளவில் ஒப்பிடும்போது கடந்த அண்டை விட தமிழகத்தில் 10 சதவீகிதம் வருமான வரி வசூல் உயர்ந்துள்ளது. மேலும் 2023-2024ஆம் நிதியாண்டில் 20 சதவீதமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக கூறியுள்ளார் .
மேலும் வருமான வரி வசூல் சரியாக செலுத்தாமல் இருப்பவர்களை கண்டுபிடிப்பது மிகவும் சுலபம் என்று கூறிய அவர் 30 லட்சத்துக்கு மேல் நிலம் வாங்கினால், அல்லது 10 லட்சத்துக்கு மேல் வங்கிக் கணக்கில் பணம் வைத்திருந்தால், 2 லட்சத்துக்கு மேல் பொருட்கள் வாங்கினால் கண்காணிக்கப்படுவார்கள் என்று வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் இரவிச்சந்திரன் ராமசாமி கூறியுள்ளார்.
மேலும் வருமான வரித்துறை நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்க 16 தலைப்புகளில் காணொளிப்பதிவு தயாரிக்கப்பட்டு tnincometax.gov.in என்னும் வருமான வரித்துறை இணையத்தில் பதிவேற்றப்பட்டது என்று தெரிவித்தார்.