இனி பால் பாக்கெட்களில் கூடுதலாக 10 மில்லி லிட்டர்!! மாநில அரசின் புதிய திட்டம்!!
கர்நாடக மாநிலத்தில் நந்தினி பால் என்பது மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. அது தற்பொழுது சுவை மிக்க திருப்பதி லட்டு செய்வதற்கு நெய் வழங்கி வந்த நந்தினி நிறுவனம் இனி நெய் வழங்க போவதில்லை என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் நந்தினி நிறுவனத்தில் விபனை செய்யப்பட்டு வந்த பாலின் விலை லிட்டருக்கு மேலும் நந்தினி நிறுவனத்தில் விபனை செய்யப்பட்டு வந்த பாலின் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்ந்துள்ளது.மேலும் அவர்களின் நெய் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நந்தினி பால் பாக்கெட்டின் அரை லிட்டர் விலை 21.5 ரூபாயாக உள்ளது.அதனை போன்று ஆரஞ்சு பால் பாக்கெட்டின் அரை லிட்டர் விலை 24 ரூபாயாக உயர்ந்துள்ளது.
அந்த வகையில் 50 காசுகள் கடைகாரர்கள் சில்லறை தருவதில்லை என்று புகார் வருவதால் இதற்கு தீர்வு கான கர்நாடக அரசு இனி சில்லறைக்கு பதிலாக எக்ஸ்ரா பால் தருவதாக திட்டமிட்டுள்ளனர்.
இதனை வாடிக்கையாளர்களுக்கு தெரியபடுத்தும் விதமாக பால் பாகேட்களில் எக்ஸ்ட்ரா 10 மில்லி லிட்டர் உள்ளது என்று அச்சிடப்பட வேண்டும்.
இந்த திட்டத்தின் மூலம் மக்களிடையே ஏற்பட்ட புகார் கர்நாடக அரசின் செயலால் இதற்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டது.மேலும் பால் கொள்முதல் விலை ,மாடுகளுக்கு தீவனம் போன்ற செலவுகள் அதிகரிப்பால் பாலின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக நந்தினி நிறுவனம் தெரிவித்துள்ளது.