தமிழக அரசானது தமிழக அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் 7.5% இட ஒதுக்கீடு 10% இட ஒதுக்கீடாக மாற்ற திட்டமிட்டு இருக்கிறது.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருப்பதாவது :-
மருத்துவத்துறையில் அதிக அளவு தமிழக மாணவர்கள் பெற வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்திருப்பது நீட் தேர்வை எழுதினால் மட்டுமே மருத்துவ தேர்வில் சேர முடியும் என்ற நிலை தற்பொழுது இருப்பதால் கிராமப்புற மாணவர்களின் கனமானது பாதிக்கப்பட்ட இருப்பதாகவும் அமைச்சர் மாசுபிரமணியன் தெரிவித்திருக்கிறார். மேலும் நீட் தேர்வின் உடைய அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய நிலையானது தற்பொழுது நிகழ்ந்து வருவதாகவும் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நீட் தேர்வின் கொடுமைகளை சுட்டி காட்டியதோடு அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் மருத்துவ துறையில் மாணவர்களுக்கு குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடானது தற்பொழுது உயர்த்தப்பட இருப்பதாகவும் இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை நடத்தி தகுந்த முடிவை வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவு வெளியிடப்படும் பட்சத்தில் இட ஒதுக்கீடு உயர்வு மாணவர்களுக்கு பெரிய அளவில் நன்மை பயக்கும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.