நாடாளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டி! கூட்டணி கட்சிகளுக்கு பாஜக கொடுத்த ஷாக்

0
224

நாடாளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டி! கூட்டணி கட்சிகளுக்கு பாஜக கொடுத்த ஷாக்

 

கிருஷ்ணகிரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜக மாநில செய்தி தொடர்பாளருமான நரசிம்மன் இன்று ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் பாஜக வரவுள்ள மக்களவை தேர்தலில் 10 இடங்களில் போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார்.

 

இந்த சந்திப்பின் போது பேசிய அவர் ஜோலார்பேட்டை – கிருஷ்ணகிரி இரயில் திட்டத்திற்கு இறுதி ஆய்வறிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த 2.5 கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள இரயில்வே துறை அதிகாரிகள் இந்த திட்டத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்த திட்டத்தை செயல்படுத்த எடுக்கும் சர்வே பணிகளுக்காக இரயில்வே துறை வரும் செப்டம்பர் 16 ஆம் தேதியன்று ஒப்பந்தம் கோர உள்ளது. இதனையடுத்து 60 நாட்களில் இந்த சர்வே பணிகள் அனைத்தும் நடைபெற உள்ளது.

 

இதற்காக ட்ரோன் மற்றும் ஊழியர்கள் வாயிலாகவும் சர்வே நடத்தப்படவுள்ளது. இந்த இரயில்வே திட்டப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே இந்த காரியங்கள் அனைத்தும் முடிந்து விடும். அப்படி முடிந்தால் இரயில் விடுவதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம் என்று பேசியுள்ளார்.

 

மேலும் பெங்களூரிலிருந்து ஓசூர் வரை கொண்டு வரப்படும் மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கு கர்நாடகா அரசு பணம் கொடுக்க தயாராக உள்ளது. அதே போல தமிழ்நாடு அரசும் இதில் சேர்ந்தால் தான் இந்த திட்டமானது நிறைவேறும்.

 

இந்த திட்டத்தில் கர்நாடக அரசுடன் இணைந்து செயல்பட தமிழ்நாடு அரசை கேட்பதற்காக விரைவில் பாஜக சார்பில் தமிழக முதல்வரை சந்திக்க உள்ளோம் என்றார்.

 

பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வருகிறது. எதிர்வரும் 2024 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் பாஜக வெல்ல வேண்டும் என நாங்கள் காத்திருக்கிறோம். இதில் பாஜக போட்டியிட 10 இடங்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. அதில் கிருஷ்ணகிரி மாவட்டமும் ஒன்று என்று கூறியுள்ளார்.

 

ஏற்கனவே அதிமுக மற்றும் பாஜக அமைத்த கூட்டணி இருக்கா இல்லையா என்று போய்க் கொண்டிருக்கும் சூழலில் இவர் பாஜக 10 இடங்களில் போட்டியிடும் என்று கூட்டணி கட்சிகளுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Previous articleசேலம் மாவட்டத்தில் காரை பின்னோக்கி இயக்கி சாதனை! இளைஞர்க்கு குவியும் பாராட்டுகள்!
Next articleதனியார் விடுதியில் கவர்ச்சி ஆடையில் சிக்கிய 30 இளம்பெண்கள்! திடிரென்று ரெய்டு போன போலீஸ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here