ஒரே நாளில் 100 – ஐ கடக்கும் மெட்ராஸ் ஐ பாதிப்பு! மீண்டு அரசு மருத்துவமனைகளில் தலைத்தூக்கும் மருந்து தட்டுப்பாடு!!
திமுக அரசு வந்தது முதல் ஒவ்வொரு நோய் தொற்று அதிகரிக்கும் போதிலும் அதற்கான மருந்து தட்டுப்பாடு இருந்து கொண்டே தான் வருகிறது. ஆனால் இது குறித்து கேள்வி எழுப்பினால், மருந்து தட்டுப்பாடு என்பதே இல்லை. அரசியல் கட்சிகள் அதனை பேசும் பொருளாக ஆகிவிட்டனர் என்று வசனம் தான் பக்கத்திற்கு பக்கம் பேசுகின்றனர். கொரோனா தொற்று அடுத்து இன்புளுவென்சா வந்த பொழுது மருந்து மற்றும் மாத்திரைகளுக்கு அதீத தட்டுப்பாடு காணப்பட்டது.
ஆனால் அவ்வாறு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார். மேலும் ஏதேனும் மருந்து தட்டுப்பாடு இருந்தால் 140 என்று என்னை அழைக்கலாம் என்றும் தெரிவித்தார். அந்த வகையில் சென்னை மாநகரில் தற்பொழுது மெட்ராஸ் ஐ தீவிரமாக பரவி வருகிறது. ஒரு நாளில் மட்டும் நூற்றுக்கு மேலானோர் பாதிப்படைந்து வருகின்றனர். தற்பொழுது காலநிலை மாற்றத்தால் மெட்ராஸ் ஐ நோய் தீவிரம் காட்டி வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதான முறையில் பரவி விடும். இந்த நோயின் அறிகுறிகளாக கண் எரிச்சல் கண்ணில் இருந்து நீர் வடிதல் போன்றவை காணப்படும். குறிப்பாக சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் மெட்ராஸ் ஐ குறித்து சிகிச்சை அளிக்க அவுட் பேஷன்ட் பிரிவில் ஒரு மருத்துவர் மட்டும்தான் உள்ளார். தற்பொழுது இந்தத் தொற்று தீவிரம் காட்டி வருவதால், ஒரு நாளில் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையை நாடுகின்றனர்.
அப்பொழுது வெகு நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக மக்கள் புகார் அளித்துள்ளனர். இதற்கு கூடுதல் மருத்துவர் நியமிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இதற்கான மருந்து மாத்திரைகளும் தற்போது இல்லை என மருந்து வாங்கும் இடத்தில் கூறி நோயாளிகளை திருப்பி அனுப்பி விடுகின்றனர் என்பதையும் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர் எழுதிக் கொடுக்கும் மருந்தே அங்கு இல்லாத பொழுது எவ்வாறு தொற்று நோயானது சரியாகும் என்று மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த தட்டுப்பாட்டை நீக்கி அனைவருக்கும் மருந்து கிடைக்கும் வகையில் தமிழக அரசு வழி செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.