இதை செய்தால் 100% வயிறு சுத்தமாகும்!! இனி மலச்சிக்கல் வாயுத் தொல்லை இருக்காது!!

Photo of author

By Divya

இதை செய்தால் 100% வயிறு சுத்தமாகும்!! இனி மலச்சிக்கல் வாயுத் தொல்லை இருக்காது!!

வயிறு சுத்தம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமான ஒன்று.வயிற்றில் தேவையற்ற கழிவுகள் தேங்கி கிடந்தால் மலச்சிக்கல்,வாயுத் தொல்லை,வயிறு உப்பசம்,வயிறு வலி,வாயு பிடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

வயிற்றில் தேவையற்ற கழிவுகள் தேங்குவதால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.எனவே வயிற்றை பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆரோக்கிய வழிகளை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)வெள்ளை எள்
2)சீரகம்
3)பெருஞ்சீரகம்

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/4 தேக்கரண்டி வெள்ளை எள்,1/2 தேக்கரண்டி சீரகம் மற்றும் 1/4 தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை போட்டு மிதமான தீயில் இரண்டு நிமிடங்களுக்கு வறுக்க வேண்டும்.

பின்னர் இதை ஆறவிட்டு இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னர் சாப்பிட வேண்டும்.இவ்வாறு தினமும் இரவில் செய்து வந்தால் காலையில் வயிற்றில் தேங்கி கிடக்கும் கழிவுகள் அனைத்தும் மலம் வழியாக வெளியேறி விடும்.

இதனால் மலச்சிக்கல்,வாயுத் தொல்லை,செரிமானக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)ஓமம்
2)பட்டை
3)வெந்தயம்
4)இந்துப்பு

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/4 தேக்கரண்டி வெந்தயம்,ஒரு துண்டு பட்டை,1/4 தேக்கரண்டி ஓமத்தை போட்டு மிதமான தீயில் வறுத்தெடுக்கவும்.அதன் பின்னர் அடுப்பில் ஒரு டீ பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

பிறகு அதில் வறுத்து வைத்துள்ள ஓமம்,பட்டை,வெந்தயத்தை போட்டுக் கொள்ளவும்.பிறகு சிறிது இந்துப்பு சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் வயிற்றில் தேங்கி கிடந்த கழிவுகள் அனைத்தும் மலம் வழியாக வெளியேறி விடும்.