சென்னையில் ரூ.100 கோடி மின் கட்டணம் பாக்கி!! வெளியான அதிர்ச்சி தகவல்!!
சென்னை மாநகராட்சி மட்டும் ரூ.100 கோடி மின்கட்டணம் பாக்கி வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் நாட்டில், சென்னை மாநிலத்தில் மட்டும் ரூ.100 கோடி மின்கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.இதனால் சென்னை மாநகராட்சி ஆனது மாநில நகராட்சி நிர்வாகத்துறைக்கு நிலுவையில் உள்ள தொகையை விரைந்து செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்த தொகையை 20 மாதங்களுக்கு ரூ.5 கோடி வீதம் என்ற அடிப்படையில் நிலுவையில் உள்ள மின்கட்டண தொகை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளாட்சி அமைப்புகள் மின்கட்டணத்தை மாதம் ஒரு முறை செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பாக்கி உள்ள நிலுவை தொகை அனைத்தையும் மின்வாரியம் உரிய முறைகளை பின் பற்றி வசூலிக்க முடிவு செய்வதாக கூறப்படுகிறது.
இதனால் அனைத்து தகவல்களும் அடங்கிய பலகை ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளது. அதில் உள்ளாட்சி அமைப்புகள் தரவேண்டிய தொகை மற்றும் அரசு துறைகள் செலுத்த வேண்டிய தொகை என்று அனைத்து நிலுவை தொகையையும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் மின் வாரியம் பயனற்று இருக்கும் மின் மற்றும் தேவையற்ற இணைப்புகள் என்று அனைத்தையும் துண்டிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.