100 வேலைக்கான ஊதியம் குறைப்பு! இன்று போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்!

Photo of author

By Parthipan K

100 வேலைக்கான ஊதியம் குறைப்பு! இன்று போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்து ஆண்டுதோறும் 100 நாட்களுக்கு வேலை மக்களுக்காக வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊராக வளர்ச்சி வேலை திட்டமானது அமல்படுத்தப்பட்டது.மேலும் இதற்கென கடந்த 2005 ஆம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டது.

குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள் வேலை கொடுக்கப்படும் அதற்கான ஊதியமும் அரசால் வழங்கப்படுகின்றது.கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அந்த பட்ஜெட்டில் அமைச்சகத்திற்கு முதலில் ரூ 1 லட்சத்து 35 ஆயிரம் கோடி ஒதுக்கபட்டது.அதனை தொடர்ந்து திருத்தப்பட்ட மறுமதிப்பீட்டின்படி நிதி ஒதுக்கீடு ரூ 1 லட்சத்து 81 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் ரூ 1 லட்சத்து 57 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது.நிதி ஒதுக்கீட்டில் 13 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.அதற்காக ரூ 60 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும் பட்ஜெட் தாக்குதலில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு 3 ல் ஒரு பங்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிதி குறைக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் இன்று போராட்டம் நடத்தப்படுகிறது.அதனை தொடர்ந்து டெல்லி ஐந்தர் மந்தரில் சமூக ஆர்வலர்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் தான் போராட்டத்தில் ஈடுப்படவுள்ளனர்.இந்த 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் 14 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ 6157 கோடி நிலுவையில் வைத்துள்ளது.