உண்ண உணவில்லை புதைக்க பணம் இல்லை பிணங்களுடன் வாழ்ந்த தாய்- மகன்! வறுமையின் உச்சகட்டம்! 

0
296
#image_title

உண்ண உணவில்லை புதைக்க பணம் இல்லை பிணங்களுடன் வாழ்ந்த தாய்- மகன்! வறுமையின் உச்சகட்டம்! 

புதைப்பதற்கு பணம் இல்லாததால் இறந்து போன கணவர் மற்றும் தாயின் அழுகிய உடலுடன் 7 நாட்கள்  பெண் மற்றும் அவரது மகன் வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெற்றுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள குமணன் வீதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் வயது 74. இவரது மனைவி செல்வி வயது 61. இவரது மகள் சசிரேகா வயது 35. மகன் சரவணகுமார் வயது 33. செல்வியின் தாயார் கனகாம்பாள். இவரும் இவர்களுடனே வசித்து வந்துள்ளார்.

இதில் சசிரேகா திருமணம் முடிந்து திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள கணவர் வீட்டாருடன் வசித்து வருகிறார். சரவணகுமார் சற்று மனநிலை சரியில்லை மற்றும் உடல்நிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. இதனால் மோகனசுந்தரமும் சாந்தியும் சரவணகுமாரை தங்களுடன் வைத்து பராமரித்து வந்தனர்.

மோகனசுந்தரம் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். வயது முதுமை காரணமாக மோகனசுந்தரம், கனகாம்பாள் ஆகியோரின் உடல்நலம் குன்றியது இதன் காரணமாக இருவரும் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

வேலையின்மையால் மோகனசுந்தரத்தின் குடும்பம் கடுமையான வறுமையில் வாடி வந்ததாக கூறப்படுகிறது. மோகனசுந்தரம் செல்வியும் இலவசமாக உணவு தரும் இடங்களில் உணவை வாங்கி சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மோகனசுந்தரமும் கனகாம்பாளும் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என தெரிகிறது.

வயது முதுமை உடல் நலம் பாதிப்பு போன்ற காரணங்களால் மோகனசுந்தரமும் கனகாம்பாளும் இறந்துவிட்டனர்.  இறந்த உடல்களுடனே சாந்தியும் அவரது மகன் சரவணகுமாரும் வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையே சாந்தி வீட்டில் இருந்து துர்நாற்றம் அதிகமாக வீசவே அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்து பார்த்த பொழுது மோகனசுந்தரம் மற்றும் கனகாம்பாள் உடல்கள் அழுகிய நிலையில் இருந்தன.

அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்கள் இருவரின் உடலையும் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சாந்தியிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது அவர் கூறிய செய்தி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

வறுமை உடல்நல பாதிப்பு போதிய உணவு இல்லாமல் போன்ற காரணங்களால் மோகனசுந்தரம் 7 நாட்களுக்கு முன்னாலும், கனகாம்பாள் 2 நாட்களுக்கும் முன்னாலும் உயிரிழந்துள்ளனர். அவர்களை புதைக்க பணம் இல்லை. அக்கம் பக்கத்தில் உதவி கேட்கவும் மனமில்லை. இதனால் அவர்கள் உடல்களுடன் இருந்து விட்டோம் என்று கூறியுள்ளார் இதைக் கேட்ட போலீசார் கண் கலங்கினர்.

வறுமையின் காரணமாக புதைக்க பணம் இல்லாததால் பிணங்களுடன் 7 நாட்கள் தாய் மகன் வாழ்ந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.