பழைய குப்பையை கிளறிய பாஜக! அலறி துடித்த திமுக!

0
178

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் திமுகவை சுத்தமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறது. அதற்கு முக்கிய காரணம் அந்த கட்சி செய்த ஊழல் மற்றும் இந்து எதிர்ப்புக் கொள்கை போன்றவையாகும்.இதுவரையில் ஆதிகாலத்தில் இருந்து பார்த்தால் தமிழகத்தை அதிக முறை ஆட்சி செய்து இருப்பது திமுக தான் திமுக அதிக முறை ஆட்சி செய்தது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு உண்மை அந்த கட்சி அளவுகடந்த ஊழலை செய்திருக்கிறது என்பதும்தான்.இதில் மிக முக்கியமாக கவனிக்க படுவது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மற்றும் ரேஷன் கடை ஊழல் போன்றவையாகும். கருணாநிதி முதலமைச்சராக இருந்த சமயத்தில் ரேஷன் கடைகளுக்கு கொண்டு வரப்பட்ட அரிசி மற்றும் சர்க்கரை போன்றவைகளில் ஊழல் செய்த காரணத்தால், கருணாநிதியின் ஆட்சி மத்திய காங்கிரஸ் அரசால் கலைக்கப்பட்டது.

அதற்கு முன்னதாக திமுக செய்த ஊழலை விசாரிப்பதற்காக சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையில் கருணாநிதி தரப்பில் தெரிவிக்கப்பட்ட காரணம் நகைப்புக்குரிய விஷயமாக இருந்தாலும் மறுபுறம் யோசிக்க வேண்டிய விஷயம் ஆகவும் இருந்தது. அப்படி கருணாநிதி தரப்பில் தெரிவிக்கப்பட்ட காரணம் என்னவென்றால் ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக கொண்டுவரப்பட்ட சர்க்கரை மற்றும் அரிசியில் ஊழல் செய்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சர்க்கரையை எறும்பு தின்றுவிட்டது அதனால்தான் சர்க்கரை காணாமல் போய்விட்டது அதேபோல அரிசியை எலி தின்று விட்டது என்று விசாரணை ஆணையத்தில் கருணாநிதி தரப்பில் பதில் தரப்பட்டது.

இதனால் விசாரணையில் மிகவும் திறமையானவர் பல வழக்குகளை கையாண்டவர் அதில் வெற்றியும் கண்டவர் என்று விசாரணையின் தலைவராக அமைக்கப்பட்ட சர்க்காரியா அதிர்ச்சிக்கு உள்ளானார். முடிவு விசாரணை முடிந்த பின்னர் கருணாநிதி விஞ்ஞான ஊழல் செய்திருக்கிறார் என்று ஒரு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தார் நீதிபதி சர்க்காரியா.அதன்பின்பு மத்திய அரசு தமிழகத்தில் இருந்த கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியை கலைத்தது.

கடந்த 2009ஆம் ஆண்டுமுதல் திமுக சார்பாக மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த திமுகவைச் சார்ந்த ஆ ராசா தொலைத்தொடர்புத் துறையில் பலவிதமான ஊழல் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கின் முடிவில் குற்றம் உறுதி செய்யப்பட்டதன் காரணமாக, அதற்கு உடந்தையாக இருந்த கனிமொழி உள்பட ராசாவும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இப்படி தமிழகத்தின் மிகப்பெரிய ஊழல் பெருச்சாளியாக வலம் வந்து கொண்டிருக்கும் திமுகவை எப்படியாவது மொத்தமாக தமிழ்நாட்டை விட்டு அகற்ற வேண்டும் என்பது பாஜகவின் எண்ணமாக இருந்து வருகிறது.

அதோடு காங்கிரஸ் கட்சியை போலவே திமுகவும் வாரிசு அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழகத்தின் நிதி நிலையும் மோசமாகிவிட்டது. திமுக ஆட்சியில் இருந்த காலங்களில் கருணாநிதி முதலமைச்சராக வைத்துக்கொண்டு அவருடைய குடும்பத்தார்கள் கனிமொழி, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் தற்போது திமுகவின் இளைஞரணி செயலாளராக இருந்து வரும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் செய்த ஊழல் கொஞ்ச நஞ்சம் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதையெல்லாம் கவனித்த மத்திய பாஜக அரசு எப்படியாவது திமுகவை நிர்மூலமாக்க வேண்டும் என்ற திட்டத்தில் இறங்கி அதனை செயல்படுத்த தொடங்கியிருக்கிறது.

அதோடு கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல குற்ற சம்பவங்களில் சம்பந்தப் பட்டு சிறையில் இருந்த பலரை நிபந்தனை இல்லாமல் விடுதலை செய்து அதன் மூலமாக தமிழகத்தில் நடைபெற்ற கொலை கொள்ளை கற்பழிப்பு போன்றவை ஏராளம். இதனால் பாதிக்கப்பட்ட மக்களும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலும் சொல்லிமாலாது
அதோடு திமுகவின் கூட்டணியில் ஆரம்ப காலத்திலிருந்தே இருந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தன்னுடைய வலைப்பக்கத்தில் இந்தியா சீனா எல்லை பிரச்சனையின் போது இந்திய ராணுவத்தை களங்கப்படுத்தும் விதமாக பதிவிட்டு இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதோடு இந்துமத பெண்கள் அனைவரையும் கொச்சைப்படுத்தும் விதமாக அருவருக்கத்தக்க கருத்துகளையும் அவர் தெரிவித்திருக்கிறார் என்பது எல்லோரும் அறிந்ததுதான். அதுமட்டுமல்லாமல் இந்து மத கடவுள்களை இழிவு செய்யும் விதத்தில் காணொளி ஒன்று வெளியிட்டு கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் இணையதளம் கொச்சைப்படுத்தியது அதற்கு பின்னணியில் இருந்தது திமுகவின் நிர்வாகிகள் என்பது வெட்ட வெளிச்சமாகியது.

இப்படி திமுக தமிழகத்திற்கு செய்திருக்கும் பல துரோகங்களையும் அரசியலில் நிலைத்திருக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் தலைவர்கள் ஆடிய சித்து விளையாட்டுகளையும் ஒருபுறம் வைத்து இந்தத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக பாஜக சுமார் 100 காரணங்களை தெரிவித்திருக்கிறது. இது தமிழக அரசியலில் மிகப்பெரிய பயத்தை உண்டாக்கி இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.

Previous articleவிஜயகாந்த் கட்சிக்கு இப்படியொரு சோதனையா?… சுத்தி சுத்தி அடிக்கும் சோகம்!
Next articleமக்கள் உயிர் மீது அக்கறை இல்லாத அரசாங்கம்! மனிதாபமின்றி வழங்கிய தீர்ப்பு!