விஜயகாந்த் கட்சிக்கு இப்படியொரு சோதனையா?… சுத்தி சுத்தி அடிக்கும் சோகம்!

0
91
vijayakanth
vijayakanth

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடிய கொரோனா வைரஸ் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் படிப்படியாக குறைந்து, 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கோவேக்சின், கோவிட்ஷீல்டு என உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும் கொரோனா தடுப்பூசிகளை எல்லாம் காலி செய்யும் அளவிற்கு இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதுவரை பொதுமக்களிடையே தீவிரமாக பரவி வந்த தொற்று, தற்போது தேர்தல் களத்தில் தன்னுடைய வேட்டையை ஆரம்பித்துள்ளது அரசியல் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் பிரச்சாரம், பொதுக்கூட்டம், மாநாடு, வாக்கு சேகரிப்பு என அரசியல் கட்சி தலைவர்கள் தீயாய் வேலை செய்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேமுதிக தொண்டர்களை பேரதிர்ச்சி அடைய வைக்கும் விதமாக அக்கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

எல்.கே.சுதீஷுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சேலம் மேற்கு சேலம் மேற்கு தொகுதி வேட்பாளர் அழகாபுரம் மோகன் ராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைமையையும், தொண்டர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே விஜயகாந்த் பிரசாரத்திற்கு செல்வாரா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ள நிலையில், நட்சத்திர பேச்சாளரான எல்.கே.சுதீஷுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் களத்தில் பிரேமலதா விஜயகாந்தும், அவருடைய மகன் விஜய பிரபாகரனும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

vijayakanth

சேலம் மேற்கு தொகுதி தேர்தல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தேமுதிக சார்பில் சேலம் மேற்கு தொகுதி வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் கொரோனா தொற்றால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஐந்து நாட்கள் சிகிச்சை முடிந்ததும் சேலம் மேற்கு தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் அதுவரை தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் மட்டுமல்லாது கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மேற்கு தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பது எனவும் தெரிவித்தார்.

author avatar
CineDesk